ஜவான் படத்திற்கு ஆஸ்கர் விருது வேணுமா…? உங்க பேராசைக்கு ஒரு அளவில்லையா அட்லீ?

Author: Shree
20 September 2023, 11:56 am

தமிழ் சினிமாவின் இளம் ஹிட் இயக்குனரான அட்லீ ராஜா ராணி, தெறி, மெர்சல், பிகில் என தொடர் ஹிட் திரைப்படங்களை இயக்கி புகழ் பெற்றார். தற்போது பாலிவுட் நட்சத்திர நடிகரான ஷாருக்கானை வைத்து ஜாவான் படத்தை இயக்கினார்.

atlee kumar

இப்படத்தில் நயன்தாரா ஹீரோயினாக நடித்தார் . இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் போன்ற மொழிகளில் வெளியாக உள்ள இப்படத்தை ‘ரெட் சில்லிஸ் என்டர்டெயின்மென்ட்’ சார்பாக ஷாருக்கானின் மனைவி கௌரி கான் தயாரித்தார்.பிரமாண்டமாக உருவாகிய ஜவான் படம் உலக அளவில் நல்ல கலெக்ஷனை அள்ளியுள்ளது.

சுமார் ரூ. 300 கோடியில் தயாரிக்கப்பட்ட இப்படம் இதுவரை ரூ.880 கோடிக்கு வசூல் ஈட்டியுள்ளது. இது அட்லீயின் கெரியரில் மிகப்பெரிய சாதனையாகவே பார்க்கப்படுகிறது. இந்த மாபெரும் வெற்றியால் அட்லீ கொஞ்சம் மிதப்பில் சுற்றி திரிகிறாராம். ஓவராக சீன் போடுகிறாராம்.

ஆம், சமீபத்திய பேட்டி ஒன்றில், கிட்டத்தட்ட 4 வருடம் நான் பட்ட கஷ்டத்திற்கு சரியான பலன் இப்போது கிடைத்திருக்கிறது. அதனால் இப்படத்தின் வசூலை கொண்டாடி வருகிறேன். எனக்கு ஒரே ஒரு ஆசை தான் என்னுடைய படத்திற்கு ஆஸ்கர் விருது கிடைக்கவேண்டும்.

மேலும், கோல்டன் குளோப் விருதும் ஜவான் படத்திற்கு கிடைக்கவேண்டும் என கூறினார். இதனை கேட்டதும் நெட்டிசன்ஸ் சிலர் ” உங்க பேராசைக்கு ஒரு அளவே இல்லையா அட்லீ?” படம் முழுக்க பிட்டு பிட்டா காப்பி அடிச்சு ஒட்டிவச்சிட்டு அதுக்கு ஆஸ்கர் வேறு கொடுக்கணும் என்று பேராசைப்படுவது ஜீரணிக்கவே முடியவில்லை என திட்டி தீர்த்துள்ளனர்.

  • income tax department sent notice to empuraan director prithviraj பிரித்விராஜ்ஜுக்கு வந்த நோட்டீஸ்; கவர்மெண்ட்டு வேலையை காட்டிருச்சு- பொங்கும் நெட்டிசன்கள்…