ஒற்றைக்காலில் அடம் பிடிக்கும் அட்லீ…மீண்டும் பாலிவுட் படமா..!
Author: Selvan10 January 2025, 9:29 pm
பாலிவுட்டில் தன்னுடைய 2-வது படத்தை தயாரிக்கும் அட்லீ
தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனர்களில் ஒருவரான அட்லீ பல வெற்றி படங்களை தந்துள்ளார்.அதிலும் குறிப்பாக நடிகர் விஜயை வைத்து தெறி, மெர்சல்,பிகில் என மாஸ் படங்களை கொடுத்தார்.
இதையும் படியுங்க: ஆல் ஏரியா நம்ம தான் KING… துபாய் கார் ரேஸில் பட்டையை கிளப்பிய அஜித்…கொண்டாட்டத்தில் ரசிகர்கள்..!
இவர் சமீப காலமாக படம் இயக்குவதை தாண்டி தயாரித்தும் வருகிறார்.அந்த வகையில் சமீபத்தில் கீர்த்தி சுரேஷ் மற்றும் வருண் தவானை வைத்து பேபி ஜான் படத்தை தயாரித்தார்.தமிழில் விஜய் நடிப்பில் வெளிவந்த தெறி படத்தை ரீமேக் செய்து இப்படத்தை தயாரித்துள்ளார்.
பேபி ஜான் படம் அட்லீக்கு கை கொடுக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில்,அப்படம் மிகப்பெரிய தோல்வியை சந்தித்து நஷ்டத்தை சந்தித்தார்.இதனால் பாலிவுட்டில் அடுத்த படம் தயாரிக்க மாட்டார் என சினிமா வட்டாரங்கள் மத்தியில் பேசப்பட்டு வந்த நிலையில்,தற்போது அட்லீ அடுத்து தயாரிக்க இருக்கும் படத்தின் தகவல்கள் வெளியாகியுள்ளது.
இப்படத்தில் நடிகர் ஷாகித் கபூரை ஹீரோவாக நடிக்க வைக்க போவதாக தகவல்கள் பேசப்பட்டு வருகிறது.