நிறைமாத நிலவே வா வா… வாழ்க்கையில் மறக்க முடியாத நாள் இது: பிரியா அட்லீ வெளியிட்ட க்யூட் போட்டோஸ்..!
Author: Vignesh23 January 2023, 1:30 pm
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர் அட்லி. இவர் ராஜா ராணி, தெறி, மெர்சல், பிகில் உள்ள படங்களை இயக்கியுள்ளார்.
தற்போது இந்தி சூப்பர் ஸ்டார் ஷாருக்கான், நயன் தாரா நடிப்பில் ஜவான் என்ற படத்தை இயக்கி வருகிறார். சில ஆண்டுகளாக ஷாருக்கானின் படங்கள் வெளியாகாத நிலையில், பதான் மற்றும் ஜவான் ஆகிய படங்கள் மிகவும் எதிர்பார்க்கப்படுகிறது.
மிகப்பெரிய பட்ஜெட்டில் ஜவான் படம் உருவாகி வரும் நிலையில், தொடர்ந்து அட்லியின் படங்கள் மீது வைக்கப்படும் அதே குற்றச்சாட்டு இப்படத்திலும் இடம்பிடித்துள்ளது.
முன்னதாக அட்லி, பிரியா என்பவரை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். பிரியா குறும்படங்கள் மூலம் ரசிகர்களுக்கு அறிமுகமானார்.
கடந்த 2014ம் ஆண்டு திருமணம் செய்துகொண்ட இவர்கள் சுமார் 9 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது கர்ப்பம் ஆகியுள்ளார்.
9 வருடங்களுக்கு பிறகு பிரியா கர்ப்பமாகியுள்ள நிலையில் சமீபத்தில் வளைகாப்பு விழா நடைபெற்றது. இதில் அட்லீயின் ஃபேவரைட் நடிகரான விஜய் பங்கேற்று தம்பதியை வாழ்த்தினார்.
அந்த ஜோடிக்கு அழகிய ஓவியம் ஒன்றை இந்த ஜோடிக்கு பரிசாகவும் தந்தார்.இந்த ஓவிய பரிசுதான் நிறுத்தாமல் ரூ. 400 கோடி பதிப்பிலான மற்றொரு பரிசையும் கொடுத்துள்ளார் விஜய். ஆம், தளபதி 68 படத்தை அட்லீக்கு கொடுத்துள்ளாராம்.
இந்நிலையில், தற்போது பிரியா சீமந்த நிகழ்ச்சியின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை ஷேர் செய்து எங்களது வாழ்க்கையில் மறக்க முடியாத நாள் என பதிவு செய்துள்ளார்.
இதோ அந்த புகைப்படங்கள்,