நன்றி மறந்த அட்லீ… விஜய்யை எதிர்க்க துணிந்த சம்பவம் – கடுங்கோபத்தில் ரசிகர்கள்!
Author: Shree15 March 2023, 1:53 pm
நடிகர் அட்லீ விஜய் கூட்டணி என்றாலே மெகா ஹிட் தான். இவர்கள் இருவரும் இணைந்து தெறி, மெர்சல், பிகில் உள்ளிட்ட சூப்பர் திரைப்படங்களை கொடுத்திருக்கிறார்கள். அட்லீ விஜய்யை சொந்த அண்ணனாக பார்ப்பதாக பேட்டிகளில் கூட கூறியிருந்தார்.
தற்போது அட்லீ பாலிவுட் ஸ்டார் நடிகர் ஷாருக்கானை வைத்து ஜவான் படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் நயன்தாரா ஹீரோயினாக நடிக்க. விஜய் சேதுபதி மிரட்டலான வில்லனாக நடித்திருக்கிறார்.
இந்நிலையில் இப்படத்தை விஜய்க்கு போட்டியாக அட்லீ அக்டோபர் மாதம் வெளியிட திட்டமிட்டுள்ளாராம். ஆம், விஜய்யின் லியோ படமும் அப்போது தான் வெளியாகிறது. அண்ணன் என கூறி சொந்தம் கொண்டாடிவிட்டு அவரையே எதிர்க்க துணிந்த அட்லீயை ரசிகர்கள் விமர்சித்து தள்ளியுள்ளனர் .