புஷ்பா 2 பார்த்துவிட்டு அட்லீ சொன்ன வார்த்தை…X-தளத்தில் பதிவு..!

Author: Selvan
6 December 2024, 5:32 pm

‘புஷ்பா 2’ பற்றி இயக்குனர் அட்லீ பாராட்டு

அல்லு அர்ஜுன்,ராஸ்மிகா மந்தனா, பகத் பாசில் ஆகியோர் நடிப்பில் நேற்று (டிசம்பர் 5 ) பிரமாண்டமாக வெளிவந்த திரைப்படம் புஷ்பா 2 தி ரூல்.இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வசூலை அள்ளி வருகிறது.

Pushpa 2 Blockbuster Success

கிட்டத்தட்ட 12000 திரைகளில் வெளியாகியுள்ள புஷ்பா-2 1000 கோடிக்கு மேல் வசூலை பெரும் என எதிர்பாக்கப்படுகிறது.படத்தை பார்த்து விட்டு பல சினிமா பிரபலங்கள் புஷ்பா 2 படக்குழுவை பாராட்டி வருகின்றனர்.

இதையும் படியுங்க: 21 வயதில் ரெண்டு குழந்தைகளுக்கு தாயான பிரபல நடிகை…ஷாக் ஆன ரசிகர்கள்..!

அந்த வகையில் இயக்குனர் அட்லீ தற்போது அவருடைய ட்விட்டர் பக்கத்தில் தன்னுடைய விமர்சனத்தை பதிவிட்டுள்ளார்.

அதில்”அல்லு அர்ஜுன் சார் வாவ் சார் ..இந்த படம் என்னுடைய இதயத்தை வருடி விட்டது,உங்களுடைய நடிப்பு மிக அற்புதமாக இருந்தது எனவும் இன்னொரு ப்ளாக்பஸ்டர் கொடுத்ததற்கு வாழ்த்துக்கள் சார்..இயக்குனர் சுகுமார் ரொம்ப கடின உழைப்பை போட்டுள்ளார்..மொத்த படக்குழுவிற்கும் என்னுடைய வாழ்த்துக்கள்”என கூறி பகத் பாசிலை நீங்க LETHAL BRO என அட்லீ பெருமிதமாக பாராட்டியுள்ளார்.

  • thalapathy vijay vs thalapathy movie on same day தளபதியுடன் மோதும் தளபதி? அடேங்கப்பா, இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!