ஆட்டோவுல ஒரு Rounds கூப்பிட்டு போனா தான் நடிப்பேன்…. தெறி பேபி நைனிகா பண்ண அட்டகாசம்!

Author: Shree
1 June 2023, 11:51 am

1982ஆம் ஆண்டு நெஞ்சங்கள் படத்தில் ஒரு குழந்தை நட்சத்திரமாக நடித்து சினிமாவிற்குள் அறிமுகமானவர் நடிகை மீனா. இவர் தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னாளில் ஹீரோயினாக புகழ் பெற்றிருப்பவர் நடிகை மீனா. ரஜினி உடன் குழந்தை நட்சத்திரமாக அன்புள்ள ரஜினிகாந்த் திரைப்படத்தில் நடித்த இவர், பின்னர் வீரா மற்றும் முத்து, எஜமான் போன்ற திரைப்படங்களில் ஜோடியாக நடித்தார்.

இவர் வித்தியாசாகர் என்பவரை கடந்த 2009ம் ஆண்டு திருமணம் செய்துக்கொண்டார். இவர்களுக்கு நைனிகா என்ற மகள் இருக்கிறார். நைனிகா தனது 5 வயதில் தெறி என்ற திரைப்படத்தில் விஜய்யின் மகளான நடித்து அனைவரது மனதையும் கவர்ந்தார். அட்லீ இயக்கத்தில் வெளியான இப்படத்தின் மூலம் நைனிகாவுக்கு ஒரு நல்ல அறிமுகம் கிடைத்தது என்றே சொல்லலாம்.

இது குறித்து இயக்குனர் அட்லீ சில வருடங்களுக்கு முன்னர் பேட்டி ஒன்றில், தெறி படத்தின் ஷூட்டிங்கில் நைனிகாவின் நடிப்பை குறித்து பேசியிருக்கிறார். ஒரு ஷாட்டில் டயலாக் பேசிக்கொண்டிருக்கும் போதே பாதியில் ஆட்டோவை பார்த்து கவனம் சிதறி… அது என்னது? என கேட்டார். அப்போது தான் எனக்கு ஒன்று தெரியவந்து. அவள் ஆட்டோவை பார்த்து ஏதோ புதுசா ஆச்சர்யப்படுகிறாள் என்று. அதன் பிறகு அந்த ஆட்டோவை கூப்பிட்டு நைனிகாவை உட்காரவைத்து ஒரு ரவுண்ட்ஸ் போய்ட்டுவந்தால் நல்லா நடிப்பா? அப்படித்தான் அவ சோர்ந்து போகும்போதெல்லாம் ஆட்டோவை கூப்பிட்டு ரவுண்ட்ஸ் அடிப்போம் என தெறி பட ஷூட்டிங் அனுபவத்தை கூறியுள்ளார்.

https://www.youtube.com/shorts/PbiAj9Y4Vmk
  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி