பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர் அட்லீ. இவர் ராஜா ராணி படத்தை இயக்கி தமிழ் சினிமாவில் அறிமுகமானார். முதல் படமே சூப்பர் ஹிட் கொடுக்க இளம் வெற்றி இயக்குனராக வலம் வந்தார். அதை தொடர்ந்து தெறி, மெர்சல், பிகில் உள்ளிட்ட தொடர் வெற்றி படங்களை இயக்கி தமிழ் சினிமாவின் டாப் இயக்குனர் என்ற இடத்தை பிடித்தார்.
அதையடுத்து அண்மையில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் வைத்து ஜவான் என்ற படத்தை இயக்கி மாபெரும் வெற்றி கண்டுள்ளார். இவர் நடிகை பிரியாவை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். 8 வருடங்களுக்கு பிறகு அண்மையில் தான் இவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்தது. அட்லீ தொடர்ந்து திரைப்படம் இயக்குவதில் கவனத்தை செலுத்தி வருகிறார்.
பாலிவுட்டிற்கு சென்று அங்கு அறிமுக படமே மெகா ஹிட் கொடுத்ததால் அட்லீயின் மார்க்கெட் வேற லெவலுக்கு சென்றுவிட்டது. ஜவான் படத்தை இயக்கி ஆயிரம் கோடி பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் கொடுத்த அட்லீக்கு சல்மான் கான் தனது படத்தை இயக்க அழைப்பு விடுத்துள்ளதாக செய்திகள் வெளிவருகிறது. இப்படியான நேரத்தில் அட்லீயை சுற்றிவளைத்து நேர்காணல் எடுத்து வருகிறது பாலிவுட் சேனல்கள்.
அப்படி மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அட்லீயிடம் ஆங்கர் அடுக்கடுக்காக இந்தியில் கேள்வி கேட்க, அட்லீ வேற மாதிரி தக் லைஃப் ரிப்ளை கொடுத்திருப்பது தான் தற்போது கோலிவுட் சினிமாவின் தலைப்பு செய்தியாக பேசப்பட்டு வருகிறது. ஆம், தொடர்ந்து இந்தியில் அடுக்கடுக்கான கேள்வி கேட்ட ஆங்கரை பார்த்து ‘நான் நல்லா இருக்கேன்… நீங்க எப்படி இருக்கீங்க’ என தமிழில் பதில் சொல்ல அந்த அரங்கமே சிரிப்பொலியால் அதிர்ந்தது. இதை கேட்ட தமிழ் ரசிகர்கள்… ” ஊருக்கு நாலு பேரு இப்படி இருந்தால் எவனாலும் ஒன்னும் பண்ணமுடியாது என கருத்து கூறி வருகிறார்கள்.
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…
எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…
தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…
பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…
This website uses cookies.