மீண்டும் சூப்பர்ஸ்டாருடன் இணையும் அட்லீ.. இந்த தடவை எந்த படத்தை பட்டி டிங்கரிங் பார்ப்பாரு..!

Author: Vignesh
3 November 2023, 5:19 pm

தமிழ் சினிமாவின் இளம் ஹிட் இயக்குனரான அட்லீ ராஜா ராணி, தெறி, மெர்சல், பிகில் என தொடர் ஹிட் திரைப்படங்களை இயக்கி புகழ் பெற்றார். அதையடுத்து கடைசியாக பாலிவுட் நட்சத்திர நடிகரான ஷாருக்கானை வைத்து ஜாவான் படத்தை இயக்கினார்.

இப்படத்தில் நயன்தாரா ஹீரோயினாக நடித்தார். கடந்த செப்டம்பர் 7ம் தேதி வெளியான இப்படம் இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் போன்ற மொழிகளில் ரிலீஸ் ஆகியது இப்படத்தை ‘ரெட் சில்லிஸ் என்டர்டெயின்மென்ட்’ சார்பாக ஷாருக்கானின் மனைவி கௌரி கான் தயாரித்திருந்தார்.பிரமாண்டமாக உருவாகிய ஜவான் படம் உலக அளவில் நல்ல கலெக்ஷனை அள்ளியுள்ளது.

சுமார் ரூ. 300 கோடியில் தயாரிக்கப்பட்ட இப்படம் இதுவரை ரூ. 1146 கோடிக்கு வசூல் ஈட்டியுள்ளது. இது அட்லீயின் கெரியரில் மிகப்பெரிய சாதனையாகவே பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், ஜவான் வெற்றிக்கு பின் மீண்டும் ஷாருக்கான் – அட்லீ கூட்டணி இணையப்போவதாக பாலிவுட்டில் பேசப்படுகிறது. தற்போது கைவசம் வைத்துள்ள படங்களை ஷாருக்கான் முடித்தபின் அட்லீ இயக்கத்தில் நடிக்க ஓகே சொல்லி இருக்கிறார் என்றும் கூறப்படுகிறது.

jawan

அட்லீயின் இப்படத்தையும் நெட்டிசன்ஸ் வழக்கம் போலவே ட்ரோல் செய்து வருகிறார்கள். அதன்படிகோலிவுட் முதல் ஹாலிவுட் வரை பல்வேறு படங்களில் இடப்பெற்ற காட்சிகளை பிட்டு பிட்டாக சுட்டு தான் படம் எடுத்து வருவதாக கலாய்த்து வருகின்றனர். குறிப்பாக பிரபல இயக்குனரின் படத்தில் இருந்தே நிறைய காட்சிகள் சுடப்பட்டிருப்பதாக நெட்டிசன்ஸ் கண்டுபிடித்து கலாய்த்து வருகிறார்கள்.

  • sundar c openly talks about nayanthara in mookuthi amman sets நயன்தாரா இப்படிலாம் செய்வாங்கனு எதிர்பார்க்கல- உண்மையை போட்டுடைத்த சுந்தர் சி!