ரஜினியின் அருகில் கையில் துப்பாக்கியுடன் பிரபல இயக்குனர்.. எந்திரன் படத்தின் UNSEEN புகைப்படம்..!

Author: Vignesh
29 February 2024, 5:14 pm

இந்தியத் திரையுலகின் முன்னணி இயக்குனர்கள் என்று சொன்னால் விரல்விட்டு எண்ணும் வகையில் சில இயக்குனர்கள் மிஞ்சுவார்கள். அதில் முக்கியமான இயக்குனர் என்று பார்த்தால் நம்ம ஊரு இயக்குனர் ஷங்கர். அவரது படங்களில் சமூகத்தின் மேல் இருக்கும் அவரின் கோபத்தின் வெளிப்பாடு நம்மளை பயமுறுத்த வைக்கும். இவரின் படங்கள் தமிழைத் தாண்டி பல மொழிகளிலும் வரவேற்பைப் பெற்றுள்ளன.

Shankar

பிரம்மாண்ட படம்களுக்கு விதை போட்ட இயக்குனர் ஷங்கரின் பாதைதான் இன்று பல இயக்குனர்கள் Follow செய்யும் Method. ஆனால், பாகுபலி மற்றும் பாகுபலி 2, RRR,KGF 2, புஷ்பா படங்களின் வெற்றிக்குப் பிறகு வேறு மாநில இயக்குனர்கள் பக்கம் சென்றுவிட்டது. ஷங்கர் இயக்கிய ‘2.0’ படம் நல்ல வசூல் பெற்றாலும் ‘பாகுபலி’ வசூலை நினைத்து கூட பார்க்க முடியவில்லை.

Rajinikanth-in-Enthiran

இந்தநிலையில், இந்தியன் படத்திற்கு பிறகு மீண்டும் கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் 2 படத்தை ஷங்கர் இயக்கி வருகிறார். தற்போது, பிரம்மாண்ட இயக்குனரான ஷங்கரின் படைப்புகளில் ஒன்றான எந்திரன். இந்த படம் குறித்து தமிழ் சினிமாவே பெருமிதம் கொள்ளும் அளவிற்கு எந்திரன் படத்தை இயக்கியிருந்தார் இயக்குனர் சங்கர். மேலும், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் திரையில் சிட்டி ரோபோவாக காட்டிய விதம் அசத்தலாக இருந்தது.

Rajinikanth-in-Enthiran

ஹாலிவுட்டிலிருந்து சயின்டிபிக் திரைப்படங்கள் வந்து கொண்டிருந்த காலகட்டத்தில் தமிழ் சினிமாவிலும் அப்படி ஒரு படம் பண்ண முடியும் என காட்டியவர் இயக்குனர் ஷங்கர். அதேபோல், இன்று வரை ரஜினியின் திரை வாழ்க்கையில் டாப் 5 திரைப்படங்கள் என லிஸ்டை எடுத்துப் பார்த்தால் அதில், எந்திரன் திரைப்படம் இடம்பெற்று இருக்கும்.

Rajinikanth-in-Enthiran

இந்நிலையில், பிரம்மாண்ட இயக்குனரான ஷங்கரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த அட்லி அதுவும், சூப்பர் ஸ்டாரின் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான எந்திரன் திரைப்படத்தில் தான் துணை இயக்குனராக பணியாற்றினார். எந்திரன் படத்தில் வரும் காட்சி ஒன்றில் சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் கையின் துப்பாக்கி வைத்துக் கொண்டு நிற்கும் அட்லீயின் புகைப்படம் வெளியாகியுள்ளது. ரசிகர்கள் பலரும் பார்த்திராத இந்த புகைப்படம் தற்போது, இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

Enthiran

  • Vishal health concerns viral video விஷாலுக்கு FIRST என்ன பிரச்சனைன்னு தெரியுமா…ரசிகர் மன்றம் வெளியிட்ட திடீர் அறிக்கை…!
  • Views: - 211

    0

    0