அப்படி நடிச்சு உண்மையிலே கண்ணு போயிடுச்சு…. பார்வை இழந்து பரிதாப நிலையில் அட்டகத்தி தினேஷ்!

Author: Shree
3 June 2023, 8:39 am

தமிழ் சினிமாவில் திறமையான நடிகர்களில் ஒருவராக இருந்தவர் நடிகர் அட்டகத்தி தினேஷ். இவர் 2012ம் ஆண்டு வெளியான அட்டகத்தி என்ற திரைப்படத்தின் கதாநாயகனாக நடித்ததன் மூலம் பிரபலமான நடிகர் ஆனார். அதற்கு முன்னர் ஈ, எவனோ ஒருவன், ஆடுகளம்,மௌன குரு உள்ளிட்ட படங்களில் சின்ன சின்ன ரோல்களில் நடித்திருக்கிறார்.

குக்கூ, திருடன் போலீஸ், விசாரணை, ஒரு நாள் கூத்து உள்ளிட்ட திரைப்படங்களில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி பெரும் அளவில் புகழ் பெற்றார். இதனிடையே புது நடிகர்களின் திறமை இருந்தும் மார்க்கெட் இழந்தார். பின்னர் சில வருடங்கள் ஆள் அட்ரஸே இல்லாமல் போய்விட்டார். இவர் நடிக்கவில்லை என்றாலும் அவரது படங்கள் இன்னும் அவரை நினைவில் வைத்திருக்கிறது.

இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் அட்டகத்தி தினேஷ், குறித்து பா. ரஞ்சித் ஒரு ஷாக்கிங் உண்மையை கூறியுள்ளார். அதாவது, அட்டகத்தி தினேஷ் குக்கூ படத்தில் பார்வை இல்லாதவர் போல் நடித்திருப்பார். படம் முழுக்க அவர் அப்படி நடித்ததால் உண்மையிலே அவருக்கு பார்வை போய்டுச்சு. அவரது பார்வை படத்தில் நடித்தது போலவே மாறிவிட்டது. பின்னர் ட்ரீட்மெண்ட் செய்து குணமானார். அந்த அளவுக்கு டெடிகேஷனுடன் நடிப்பார் என தினேஷை புகழ்ந்து பாராட்டினார் ரஞ்சித்.

https://www.youtube.com/shorts/c2YGF2VfOcQ

  • income tax department sent notice to empuraan director prithviraj பிரித்விராஜ்ஜுக்கு வந்த நோட்டீஸ்; கவர்மெண்ட்டு வேலையை காட்டிருச்சு- பொங்கும் நெட்டிசன்கள்…