ரயில் கழிவறையில் என்னை கட்டிப்பிடித்து பலாத்காரம் செய்ய முயற்சி : அஜித் பட நடிகை வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!!

Author: Udayachandran RadhaKrishnan
30 March 2022, 7:25 pm

சமீபத்தில் தெலுங்கு நகைச்சுவை நடிகர் அலி தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. அதில் சினிமாவில் உள்ள பிரபலங்கள் தங்கள் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை கூறி வருகின்றனர்.

அப்படி அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர் தான் ரஜிதா மற்றும் சுரேகா வாணி. இருவருமே குணச்சித்திர நடிகர்கள். இதில் ரஜிதா 90களில் தமிழ் சினிமாவில் உள்ள நடிகைகளுக்கு தோழியாக, கதநாயகியின் அக்கா என பல்வேறு குணச்சித்திர வேடங்களில் நடித்திருந்தார். சமீபத்தில் அஜித்தின் வீரம் படத்தில் கூட நடித்திருந்தார்.

அப்போது அந்த நிகழ்ச்சியில் பல்வேறு விஷயங்களை பகிர்ந்த அவர், தனக்கு நடந்த பாலியல் முயற்சி பற்றி பேசியுள்ளார். ஒரு நாள் இரவு நேரத்தில் ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்த போது ரயிலில் உள்ள கழிவறையை பயன்படுத்தினேன்.

கழிவறையில் இருந்து வெளியே வந்த போது, அங்க நின்றிருந்த ஒரு நபர் என்னை திடீர் என கட்டிப்பிடித்து, தொடக்கூடாத இடங்களை எல்லாம் தொட்டார். எனக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. முதலில் அவனிடம் இருந்து என்னை காப்பாற்றிக்கொள்ள வேண்டும் என முயற்சி செய்தேன்.

ஒரு கட்டத்தில் அவனிடமிருந்து தப்பித்து, ரயிலில் உள்ள என்னுடைய பெட்டிக்கு வந்துவிட்டேன். அன்றில் இருந்து இன்று வரை ரயிலில் பயணம் செய்ய பயமாக உள்ளது என தெரிவித்துள்ளார்.

  • Family Man 3 Actor Rohit Basfore Found Dead Near Guwahati Waterfall நடுக்காட்டில் பிரபல நடிகர் சடலமாக மீட்பு : சதி திட்டம் போட்ட நண்பர்கள்? பகீர் பின்னணி!