பிரபுதேவாவின் நடனத்தை பார்த்து கைத்தட்டிய ஆடியன்ஸ்! கடுப்பான சிரஞ்சீவி?
Author: Prasad11 April 2025, 4:07 pm
நடனப்புயல்
நடனப்புயல் எனவும் இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் எனவும் அழைக்கப்படும் பிரபுதேவா, இந்தியாவின் தலை சிறந்த நடன அமைப்பாளர் ஆவார். பாலிவுட், டோலிவுட், கோலிவுட் என பல துறைகளில் உள்ள முன்னணி சூப்பர் ஸ்டார் நடிகர்களின் திரைப்பட பாடல்களுக்கு நடன இயக்குனராக பணியாற்றியுள்ளார். அந்த வகையில் தெலுங்கு சினிமாவின் டாப் நடிகரான சிரஞ்சீவி பாடலுக்கு பிரபுதேவா நடன இயக்குனராக பணியாற்றிய சம்பவத்தை குறித்து ஒரு தகவல் வெளிவந்துள்ளது.

கடுப்பான சிரஞ்சீவி!
1992 ஆம் ஆண்டு சிரஞ்சீவி, நக்மா நடிப்பில் தெலுங்கில் வெளிவந்த திரைப்படம் “கரண மொகுடு”. இத்திரைப்படத்தில் “பங்காரு கோடி பெட்டா” என்ற பாடலுக்கு பிரபுதேவா நடன இயக்குனராக இருந்தார். அந்த பாடலை படமாக்கிய சமயத்தில் சிரஞ்சீவி நெளிந்து நெளிந்து ஆடுவது போல் ஒரு நடன அமைப்பு இருந்தது.

சிரஞ்சீவி அந்த நடன அமைப்பை ஆடும்போது அது பிரபுதேவாவுக்கு திருப்தி அளிக்கவில்லை. ஆதலால் பிரபுதேவா சிரஞ்சீவிக்கு மீண்டும் அந்த நடனத்தை ஆடிக்காட்டினார். அப்போது அந்த படப்பிடிப்பை பார்த்துக்கொண்டிருந்த பலரும் பிரபுதேவாவின் நடனத்தை பார்த்து கைத்தட்டினார்களாம். இதனால் சிரஞ்சீவி கடுப்பாகிவிட்டாராம். உடனே பேக்கப் சொல்லிவிட்டு வீட்டிற்கு கிளம்பிவிட்டாராம். எனினும் அதன் பின் அந்த பாடல் படமாக்கப்பட்டது. அந்த நடன அமைப்பு இப்போதும் சிரஞ்சீவியின் Signature நடன அமைப்பாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.