பிரமாண்ட பொருட்செலவில் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் உருவாகி உள்ள ‘அவதார்: தி வே ஆஃப் வாட்டர், உலகம் முழுதும் 52 ஆயிரம் திரையரங்குகளில் இன்று வெளியாகி உள்ளது. தமிழ்நாட்டில் படத்தை வெளியிட விநியோக நிறுவனத்துடன் சில திரையரங்குகள் உடன்பாடு செய்த நிலையில் படம் அனைத்து பகுதிகளிலும் வெளியானது. அதிகாலை ஷோவுடன் டாப் ஹீரோக்களுக்கு போட்டியாக இந்தப்படம் ரிலீஸ் ஆனது.
2009-ம் ஆண்டு ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் வெளிவந்த “அவதார்” திரைப்படம், உலக சினிமாவில் அதுவரை இருந்த அத்தனை வசூல் சாதனைகளையும் முறியடித்து, 23 ஆயிரம் கோடிகளை குவித்து உலகில் அதிகம் வசூல் ஈட்டிய “அவதார்” படம் என்ற புதிய சாதனையைப் படைத்தது. இந்தியாவில் மட்டும் 100 கோடிகளைக் கடந்து வசூல் ஈட்டி சாதனை படைத்தது.
இரண்டாம் பாகமான “Avatar: The Way Of Water” 13 ஆண்டுகளுக்குப் பிறகு, அவதார் திரைப்படத்தின் வெளியாகி உள்ளது. முதல் பாகத்தின் தொடர்ச்சியாக உருவாகியுள்ள இரண்டாம் பாகத்தின் சிறப்பு முன்னோட்ட காட்சிகளை பார்த்தவர்கள், பிரம்மிப்பை ஏற்படுத்தக் கூடிய வகையில் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளனர்.
160 மொழிகளில், உலகம் முழுதும் சுமார் 52 ஆயிரம் திரையரங்குகளில், வெளியாக உள்ளது “Avatar: The Way Of Water” திரைப்படம். இந்தியாவில் மட்டும் இந்தி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட 5 மொழிகளில் மூன்றாயிரம் திரையரங்குகளில் வெளியாகிறது.
முன்பதிவு தொடங்கிய நிலையில் இந்தியாவில் சுமார் 10 கோடிக்கு மேலாக டிக்கெட் விற்றுள்ளதாக கூறப்படுகிறது. டெல்லி பிவிஆர் சினிமாவில் இரண்டாயிரத்து 500 ரூபாயும், என்.சி.ஆர் பகுதியில் 700 முதல் ஆயிரத்து 600 ரூபாய் வரையும் டிக்கெட் விற்பனையாவதாகவும், மும்பையில் 500 ரூபாய் முதல் ஆயிரம் வரை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அறிவியல் புனைகதை வரிசையில், தோற்ற மெய்ம்மை எனப்படும் விர்ச்சுவல் ரியாலிட்டி தொழில்நுட்பத்தில், 250 பில்லியன் செலவில் எடுக்கப்பட்டுள்ள அவதார் இரண்டாம் பாகமும், பல்வேறு சாதனைகளை நிகழ்த்தும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த படம் எப்படி இருக்கிறது என ரசிகர்கள் ட்விட்டரில் தொடர்ந்து பதிவிட்டு வருகின்றனர்.
'சர்தார் 2' படப்பிடிப்பு நிறுத்தம் பொன்னியின் செல்வன் 2 படத்திற்கு பிறகு,நடிகர் கார்த்தி தொடர்ந்து பல புதிய திரைப்படங்களில் பணியாற்றி…
மொஹ்சின் கானின் சர்ச்சை கருத்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் மொஹ்சின் கான்,இந்திய அணியின் முன்னணி வீரர் விராட் கோலியை…
அரையிறுதியில் வருண் ஆடுவாரா சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் தற்போது இந்திய அணி அரையிறுதிக்கு தகுதிபெற்றுள்ள நிலையில் நாளை துபாயில் ஆஸ்திரேலியாவை…
சினிமாவில் அட்ஜெஸ்ட்மென்ட் புகார் ஒவ்வொரு நாளும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கேரளா சினிமா உலகில் ஹேமா கமிட்டி கொடுத்த அறிக்கை…
தன்னைப் போன்று வெளியாகியுள்ள டீப்ஃபேக் வீடியோவை ரசிகர்கள் யாரும் பகிர வேண்டாம் என பாலிவுட் நடிகை வித்யா பாலன் கூறியுள்ளார்.…
AI மூலம் ஏமாந்த மாதவன் எச்சரித்த அனுஷ்கா சர்மா சமூக வலைதளங்களில் தற்போது AI உருவாக்கிய வீடியோக்கள் பெருகி வரும்…
This website uses cookies.