அவ்வை சண்முகி படத்தின் சிறுமியா இது? ஆள் அடையாளமே தெரியாமல் எம்புட்டு வளர்ந்திட்டாங்க!

Author: Shree
4 November 2023, 11:41 am

உலக நாயகன் கமல் ஹாசன் நடிப்பில் கடந்த 1996ம் ஆண்டு வெளியான திரைப்படம் அவ்வை சண்முகி. இப்படத்தில் ஐயர் மாமியாக லேடி கெட்டப் போட்டு அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தி மக்களை பிரம்மிக்க செய்தார்.

கே.எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கமல்ஹாசன், மீனா, நாகேஷ், ஜெமினி கணேசன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.இத்திரைப்படம் ராபின் வில்லியம்ஸ் நடித்த மிசஸ் டவுட்ஃபயர் என்னும் ஆங்கிலப் படத்தின் ரீமேக்.

இப்படத்தில் கமல் – மீனா தம்பதியின் மகளாக “ஆனி அன்ரா” என்ற சிறுமி நடித்திருந்தார். இப்படத்தில் அவரது துருதுரு நடிப்பு ரசிகர்கள் எல்லோரையும் வெகுவாக கவர்ந்தது. பல வருடத்திற்கு பிறகு “ஆன் அன்ரா”வின் புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வெளியாகி செம வைரலாகி வருகிறது.

இதில் அவர் கொஞ்சம் கூட அடையாளமே தெரியாத அளவிற்கு இளம் பெண்ணாக வசீகரிக்கும் அழகில் அனைவரையும் கவர்ந்திழுத்துவிட்டார். இந்த புகைப்படம் தற்போது சமூகவலைத்தளங்களில் வெளியாகி தீயாய் பரவி வருகிறது.

  • Amala Paul Share his Truth 17 வயதுல அந்த மாதிரியான படத்தில்.. தலைகாட்ட முடியல.. என் அப்பாதான் : அமலா பால் பகிர்ந்த உண்மை!