இறப்புக்கு முன் பவதாரிணி செய்த சேவை.. – அமைச்சர் அன்பில் மகேஷ் பகிர்ந்த வீடியோ..!

Author: Vignesh
17 May 2024, 3:14 pm
bhavatharani
Quick Share

தமிழ் சினிமாவின் தலைமுறைக்கும் பேசும், பேசப்போகும் இசை அரசனாக பார்க்கப்படுபவர் இசைஞானி இளையராஜா. இவர் அன்னக்கிளி என்ற திரைப்படத்துக்கு இசை அமைத்ததன் மூலம் 1976 இல் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் போன்ற மொழிகளில் 1000த்துக்கும் மேற்பட்ட பாடல்களை பாடியிருக்கிறார். சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதை நான்கு முறை பெற்றுள்ளார். தமிழின் நாட்டுப்புற இசையினை அதன் தரம் குறையாமல் வழங்குவதில் அவர் ஞானி.

bhavatharani

இனிமையான பாடலுக்கு கோடிக்கணக்கான ரசிகர்களை தன்வசப்படுத்துயிருக்கும் இளையராஜாவுக்கு கார்த்திக் ராஜா, யுவன் ஷங்கர் ராஜா , பவதாரிணி என மூன்று பிள்ளைகள் உள்ளனர். இதில் பவதாரிணி பாடகியாகவும், இசையமைப்பாளராகவும் இருந்து வந்தார். இதனிடையே அவர் திடீரென மரணமடைந்தார்.

மேலும் படிக்க: துளி கூட Makeup இல்லாமல் இருக்கும் ரம்யாகிருஷ்ணன்.. என்ன அழகு டா; இவங்களுக்கு 53 வயதா?.. (Video)

இந்த செய்தி ஒட்டுமொத்த திரையுலகினரையும் பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பாடகி பவதாரிணி கடந்த சில ஆண்டுகளாக புற்று நோயால் பாதிக்கப்பட்டு தொடர்ந்து உயர்தர சிகிச்சை எடுத்து வந்துள்ளார். இந்நிலையில், பவதாரிணி ஆயுர்வேத சிகிச்சைக்காக இலங்கைக்கு சென்றிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரின் மறைவு ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.

bhavatharani

மேலும் படிக்க: அந்த ஹீரோயினும் GV-யும் ஓவர் நெருக்கம்.. எனக்கு இப்படி தான் இருந்துச்சு.. சைந்தவி OpenTalk..!(Video)

பவதாரணியின் மறைவு தமிழ் திரை உலகில் மிகப்பெரிய இழப்பாக பார்க்கப்பட்டது. தேசிய விருது வென்ற பாடகி பவதாரணி மனதை மயக்கும் பல பாடல்களை தமிழில் பாடியுள்ளார். இந்த நிலையில், பாடகி பவதாரணி பெண் கல்வியும் பெண் உரிமையையும் வலியுறுத்தும் விதமாக தமிழக பள்ளிக்கல்வித்துறையில் பெண் கல்வி உரிமைகள் விடுதலை என்ற தலைப்பில் விழிப்புணர்வு பாடல் ஒன்று தயாரிக்கப்பட்டதாம்.

ilayaraja daughter death

அந்த பாடலை மறைந்த இளையராஜாவின் மகள் பவதாரணி தான் பாடியிருக்கிறார். தற்போது அந்த பாடலை அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி பகிர்ந்து நன்றி தெரிவித்து இருக்கிறார்.

Views: - 100

0

0