அயலான் படம் முழுக்க ஏலியனாக நடித்தவர் இவர் தானா.. வைரலாகும் புகைப்படம்..!

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் stand-up காமெடியன் ஆகவும், மிமிக்கிரி செய்தும் தனக்கென ரசிகர் பட்டாளத்தை பெற்றவர் நடிகர் சிவகார்த்திகேயன். கலக்கப்போவது யாரு என்னும் நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மனதில் இடம்பிடித்த இவர், சில குறும்படங்களில் நடித்தார். பின்னர், விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக தனது பேச்சின் மூலம் மக்கள் முதல் பிரபலங்கள் வரை பரிச்சயம் பெற்றார்.

பின்னர், மெரினா, 3 உள்ளிட்ட திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த இவர், மனம் கொத்தி பறவை படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். கேடி பில்லா கில்லாடி ரங்கா, எதிர் நீச்சல் என அடுத்தடுத்து இவர் நடித்த திரைப்படங்கள் வெற்றி பெறவே, முன்னணி நடிகர்களில் ஒருவராக தமிழ் திரையுலகில் வலம் வருகிறார். மேலும், நடிகராக மட்டுமல்லாது, தயாரிப்பாளர், பாடலாசிரியர் மற்றும் பாடகராகவும் திகழ்ந்து வருகிறார்.

தற்போது சிவகார்த்திகேயன் கைவசம் அயலான் திரைப்படம் உள்ளது. ரவிக்குமார் இயக்கத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவாகி வரும் இத்திரைப்படத்தில் சிவகார்த்திகேயன், ராகுல் ப்ரீத் சிங், யோகி பாபு, பால சரவணன் மற்றும் பலர் நடித்து வருகின்றனர். 2017ம் ஆண்டே துவங்கிய இப்படம் சில பிரச்சனையால் 5 வருடங்களாக ரிலீஸ் ஆகாமல் உள்ளது.

இந்நிலையில் படம் வருகிற ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகைக்கு திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. இப்படத்தில் சிவகார்த்திகேயன் சம்பளமே வாங்காமல் நடித்திருக்கிறார்.

இப்படத்தின் மையக்கரு ஏலியன் என்பதால் அதை மெனக்கெட்டு VFXல் பிரமாண்டமாக உருவாக்கி உள்ளனர். என்னதான் VFXல் ஏலியனை பிரமாண்டமாக காட்டியிருந்தாலும், VFXக்கு உதவும் வகையில் நடித்த நடிகர் யாரென்று இதுவரை பலருக்கும் தெரியவில்லை. அவருடைய பெயர் வெங்கட் செங்குட்டுவன். இவரது புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Poorni

Recent Posts

நான் மட்டும் பொண்ணா பொறந்திருந்தா? கமல்ஹாசனை பற்றி பேசி ட்ரோலுக்குள்ளான சூப்பர் ஸ்டார்

உலக நாயகன் உலக நாயகனாக வலம் வந்த கமல்ஹாசன் இந்திய சினிமாவிற்கே ஒரு நடிப்பு பல்கலைக்கழகமாக திகழ்ந்தவர். 1980களில் சாக்லேட்…

2 seconds ago

காதல் திருமணம் செய்த மகள் கொடூர கொலை… பெற்றோர் அரங்கேற்றிய நாடகம்!

ஆந்திர மாநிலம், சித்தூர் மசூதி மிட்டாவை சேர்ந்தவர் யாஸ்மின்பானு (23). பூதலப்பட்டு பகுதியை சேர்ந்தவர் சாய்தேஜ் (25). இவர்கள் இருவரும்…

31 minutes ago

ரஜினியை வாடா என்று அழைத்த ஒரே காமெடி நடிகர்? அந்த அளவுக்கு கெத்தா இவரு?

சூப்பர் ஸ்டார் கோலிவுட்டின் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ரஜினிகாந்தை எவராவது நேரில் பார்த்தால் மரியாதை தானாக வரும் என்று…

59 minutes ago

இளைஞருக்கு இப்படி ஒரு சாவா? தூங்க சென்றவருக்கு 10 கடி… நடுங்க வைத்த ஷாக் சம்பவம்!

இரவு தூங்கச் சென்ற இளைஞர் அதிகாலையில் சடலமாக அறையில் இருந்து மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேசம் மீரட் பகுதியில்…

1 hour ago

போலீஸ் ரெய்டுக்கு பயந்து 5 ஸ்டார் ஹோட்டலில் இருந்து எகிறி குதித்து தப்பியோடிய நடிகர் : அதிர்ச்சி வீடியோ!

கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள பிரபல ஐந்து நட்சத்திர ஓட்டலில் ரகசிய தகவல் அடிப்படையில் போதை தடுப்பு போலீசார்…

2 hours ago

CM குடும்பத்திற்கு சிறந்த கொத்தடிமை யார்? கருணாநிதி சமாதியில் கோயில் கோபுரம் : அண்ணாமலை கண்டனம்!

தமிழ்நாடு பட்ஜெட் 2025 - 2026ஆம் ஆண்டிற்கான இந்து அறநிலையத்துறை மானியக் கோரிக்கையை முன்னிட்டு, அண்ணா மற்றும் கலைஞர் கருணாநிதி…

2 hours ago