பிரேக் அப்… முடிவல்ல ஆரம்பம்.. 4-வது காதலரை கழட்டிவிட்ட பிக் பாஸ் பிரபலம்?..

Author: Vignesh
3 July 2023, 1:30 pm

சின்னத்திரையில் கொடிக்கட்டி பறக்கும் நடிகைகளின் ஒருவரான நடிகை ஆயிஷா, முதன் முதலாக பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “பொன்மகள் வந்தாள்” என்ற சீரியலில் அறிமுகமானார். இதனை தொடர்ந்து சீரியல் இயக்குநருடன் ஏற்பட்ட சின்ன பிரச்சினைக் காரணமாக சீரியலை விட்டு இடையில் இடைநிறுத்தம் செய்யப்பட்டார்.

இதன் பின்னர் மாயா என்ற சீரியலிலும் நடித்தார். ஆனால் இந்த சீரியல் அவருக்கென ஒரு இடத்தை கொடுக்கவில்லை. மூன்றாவது சீரியலாக மற்றுமொரு தொலைக்காட்சியில் “சத்யா” சீரியலில் நடித்து மக்கள் மத்தியில் இடம்பிடித்தார். இந்நிலையில், பிக் பாஸ் சீசன் 6 ல் முக்கிய போட்டியாளர்களில் ஒருவராக ஆயிஷா இருந்தார்.

இதனை தொடர்ந்து, சமீபத்தில், இவர் யோகேஸ்வரன் என்பவரை காதலிப்பதாகவும், அவருடன் எடுத்த சில நெருக்கமான புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பதிவிட்டு தனது காதலை வெளிப்படுத்தினார். இந்நிலையில், ஆயிஷா யோகேஸ்வரன் உடன் எடுத்த புகைப்படங்கள் அனைத்தையும் சமூக வலைதளத்தில் இருந்து நீக்கி இருக்கிறார்.

bigg boss ayesha - updatenews360

இதனால், இருவரும் பிரேக் அப் செய்துவிட்டதாக சமூக வலைதளங்களில் பலரும் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். ஆயிஷா விஷ்ணுவை காதலிக்க போவதாக தகவல் வெளியானது. மேலும், ஆயிஷாவின் முன்னாள் காதலன் தேவ் என்பவரும் ஆயிஷாவுக்கு ஏற்கனவே இரண்டு முறை திருமணமாகி விட்டதாக பேட்டி ஒன்றில் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

  • Vidaamuyarchi ticket booking தடபுடலாக தொடங்கிய “விடாமுயற்சி” டிக்கெட் முன்பதிவு…முண்டியடிக்கும் ரசிகர்கள்..!