“அவர் எனக்கு தந்தை மாதிரி”.. அப்படியே முழு பிளேட்டை மாற்றிய அசீம்.. கமல் குறித்த சர்ச்சைக்கு விளக்கம்..!

Author: Vignesh
13 February 2023, 2:30 pm

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபல நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். கடந்த மாதம் தான் பிக் பாஸ் சீசன் 6 நிறைவடைந்தது. ஆனால் இறுதி சுற்றுக்கு அசீம், விக்ரமன், ஷிவின் தேர்வானார்கள். கடைசியில் அதிக ஓட்டுகள் வாங்கி அசீம் டைட்டில் பட்டத்தை வாங்கினார்.

sherina bigg boss - updatenews360

பிக் பாஸ் போட்டியாளர்கள் அசீம், விக்ரமன், ஷிவன் இவர்கள் மூவரில் அசீமுக்கு மக்கள் மத்தியில் நல்ல ஆதரவு இருந்தது. ஆனால், அசீம் மேல் பிக் பாஸ் வீட்டில் உள்ள சக போட்டியாளர்கள் கடும் கோபத்தில் இருந்தனர்.

பிக் பாஸ் சீசனில் பல சண்டைகள் நடந்தது. அதிலும் அசீம் பல மோசமான வார்த்தையால் மற்ற போட்டியாளர்களை தாக்கினார். இதனால் பிக் பாஸ் தொகுப்பாளராக இருக்கும் கமல் ஹாசன், பல முறை அசீமை கண்டிக்கவும் செய்தார்.

KAMAL HAASAN_updatenews360

மேலும் இதுகுறித்து கமல் கூறுகையில், “உங்களின் செயலை பார்த்து தான் உங்கள் மகன் வளருவார். அதனால் இது போன்று சண்டைகளில் ஈடுபட வேண்டாம்” என்று அசீமுக்கு கமல் அறிவுரை தெரிவித்தார்.

சமீபத்தில் இதுகுறித்த பேட்டி ஒன்றில் பங்கேற்ற அசீம், கமல் ஹாசனை மறைமுகமாக தாக்கி பேசியது அனைவரிடத்திலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ” நான் ஷோவில் கோபப்படுவதை பார்த்து தான் உன் மகன் வளர்கிறான் என்று பலரும் சொன்னார்கள்”.

azeem - updatenews360

“நான் என் குழந்தையிடம் பல நேரம் செலவிடுவேன். இந்த ஷோவை பார்த்து தான் தன்னுடைய மகன் வளரனும் அவசியம் இல்லை” என்று கோவமாக பேசிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியது.

இந்நிலையில், இதை பார்த்த நெட்டிசன்கள் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கமல் ஹாசன் கூறிய அறிவுரையை தான் தற்போது அசீம் தாக்கி பேசி வருகிறார் என கூறி கடும் கண்டனங்களை தெரிவித்தனர். இந்த விஷயம் பெரும் சர்ச்சையாகவும் உருவான நிலையில், அசீம் இதுகுறித்து மீண்டும் விளக்கம் அளித்து வீடியோ வெளியிட்டுள்ளார்.

azeem - updatenews360

அதில் அசீம், ‘உங்களுடைய நேரத்தை மற்றவர்களுக்கு அன்பு காட்டுவதற்காக செலவிடுங்கள் என்றும், வெறுப்பை காட்டுவதற்கு செலவிட வேண்டாம் எனவும், நான் கமல் சாரை தாக்கி பேசவில்லை என்றும், கமல் சார் தனக்கு ஒரு தந்தை மாதிரி’ என கூறி இந்த சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

  • Nayanthara and Vignesh Shivan பாவம் விக்கி.. நயன்தாராவை திருமணம் செய்துவிட்டு கூஜா தூக்குறார்.. பிரபலம் விளாசல்!
  • Views: - 400

    0

    0