மகனுடன் அசீம்… “நீ உயரனும் என்பதே என் இலக்கு…! இது உனக்கு சமர்ப்பணம் செல்லமே”.. வைரலாகும் புகைப்படம்..!

Author: Vignesh
24 January 2023, 12:00 pm

5 சீசன்களை வெற்றிகரமாக கடந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6வது சீசன் சமீபத்தில் நிறைவு பெற்றது. 21 போட்டியாளர்களுடன் ஆரம்பிக்கப்பட்ட இந்த நிகழ்ச்சியில், ஜி.பி.முத்து, மெட்டிஒலி சாந்தி, அசல் கோளாறு, ஷெரினா, மகேஸ்வரி, நிவாஷினி, ராபர்ட், குயின்சி, ஜனனி, ராம், ஆயிஷா, தனலட்சுமி, மணிகண்டன், ரச்சித்தா ஆகியோர் பல்வேறு காலங்களில் அடுத்தடுத்து வெளியேறினர். அசீம், விக்ரமன், ஷிவின் ஆகிய மூன்று பேர் மட்டும் இறுதி போட்டிக்கு முன்னேறினர்.

முன்னதாக, 11.75 லட்சம் ரொக்கத்துடன் அமுதவாணன் பிக்பாஸ் வீட்டில் இருந்து பாதியில் வெளியேறினர். இதையடுத்து, மைனா நந்தினியும் வெளியேற்றப்பட்ட நிலையில், அசீம் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து, விக்ரமன் 2வது இடத்தையும், ஷிவின் 3வது இடத்தையும் பிடித்தனர்.

இந்த சீசனில் ஆரம்பம் முதலே சர்ச்சைக்குரிய போட்டியாளராக அசீம் தான் இருந்து வந்தார். இதுவரை நடைபெற்ற நாமிநேஷன்களில் ஒவ்வொரு முறையும் அதிக வாக்குகளை பெற்றும், அவர் காப்பாற்றப்பட்டது எப்படி என்று கேள்விகள் தொடர்ந்து எழுந்து வருகிறது. இருப்பினும், அசீம் ஒரு ஆக்ரோஷமான போட்டியாளராக கருதப்பட்டார்.

அடிக்கடி எதாவது பேசி சர்ச்சையில் சிக்கிகொள்வதை வாடிக்கையாக வைத்து வந்தார் அசீம். என்னதான் கமல் அடிக்கடி அறிவுரை கூறி வந்தாலும் வார இறுதிக்கும் பின் மீண்டும் தனது அடாவடி தனத்தை தொடர்ந்து வந்தார் அசீம். அதேவேளையில், பிக்பாஸ் வீடாக இருந்து வந்தாலும் தனது உண்மையான குணத்தை வெளிக்காட்டுவதாக இவருக்கு ஆதரவும் கிடைத்து வந்தது.

azeem - updatenews360

6 வது சீசன் முடிவுக்கு வந்தது, இந்த சீசன் வெற்றியாளராக அசீம் தேர்வு செய்யப்பட்டார். ஆனால் பிக்பாஸின் இந்த முடிவு ரசிகர்களுக்கு நிறைய பேர் எதிர்ப்பு தெரிவித்து, ஒருசிலரே ஆதரவு தெரிவித்து இருக்கிறார்கள்.

azeem - updatenews360

இந்தநிலையில், அசீம் 105 நாட்களுக்கு பிறகு தனது மகனை சந்தித்துள்ளார். பிக்பாஸில் வென்ற பணத்துடன் தனது மகனை சந்தித்த போது எடுத்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாவிலும் ஷேர் செய்துள்ளார்.

azeem - updatenews360

அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அழகி தருணம் வாழ்த்துக்கள் என கமெண்ட் செய்து வருகிறார்கள்.

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ