கமல் ஹாசனை தாக்கிய பிக்பாஸ் அசீம்.. டைட்டில் வென்ற பின் இப்படி சொல்லிட்டாரே.. வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்..!
Author: Vignesh11 February 2023, 4:30 pm
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபல நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். கடந்த மாதம் தான் பிக் பாஸ் சீசன் 6 நிறைவடைந்தது. ஆனால் இறுதி சுற்றுக்கு அசீம், விக்ரமன், ஷிவின் தேர்வானார்கள். கடைசியில் அதிக ஓட்டுகள் வாங்கி அசீம் டைட்டில் பட்டத்தை வாங்கினார்.
பிக் பாஸ் போட்டியாளர்கள் அசீம், விக்ரமன், ஷிவன் இவர்கள் மூவரில் அசீமுக்கு மக்கள் மத்தியில் நல்ல ஆதரவு இருந்தது. ஆனால், அசீம் மேல் பிக் பாஸ் வீட்டில் உள்ள சக போட்டியாளர்கள் கடும் கோபத்தில் இருந்தனர்.
பிக் பாஸ் சீசனில் பல சண்டைகள் நடந்தது. அதிலும் அசீம் பல மோசமான வார்த்தையால் மற்ற போட்டியாளர்களை தாக்கினார். இதனால் பிக் பாஸ் தொகுப்பாளராக இருக்கும் கமல் ஹாசன், பல முறை அசீமை கண்டிக்கவும் செய்தார்.
மேலும் இதுகுறித்து கமல் கூறுகையில், “உங்களின் செயலை பார்த்து தான் உங்கள் மகன் வளருவார். அதனால் இது போன்று சண்டைகளில் ஈடுபட வேண்டாம்” என்று அசீமுக்கு கமல் அறிவுரை தெரிவித்தார்.
சமீபத்தில் இதுகுறித்த பேட்டி ஒன்றில் பங்கேற்ற அசீம், கமல் ஹாசனை மறைமுகமாக தாக்கி பேசியது அனைவரிடத்திலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ” நான் ஷோவில் கோபப்படுவதை பார்த்து தான் உன் மகன் வளர்கிறான் என்று பலரும் சொன்னார்கள்”.
“நான் என் குழந்தையிடம் பல நேரம் செலவிடுவேன். இந்த ஷோவை பார்த்து தான் தன்னுடைய மகன் வளரனும் அவசியம் இல்லை” என்று கோவமாக பேசிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
Again…!!!😟😔😔
— Priyadarshini (@Priya_272) February 10, 2023
Avlo "nenju urappu" irundha, idha nee show la irukum bodhe sollirukanum.. Veliya vandhu scene potutu irukan..!!
😡😡#AbuserAzeem#ClownAzeem pic.twitter.com/36bXeYi7vb