அட இவரா.!அழகி படத்தில் சிறு வயது பார்த்திபனாக நடித்தவரின் தற்போதைய நிலைமையை பாருங்க.!
Author: Selvan16 March 2025, 7:55 pm
சதீஷ் இப்போது எப்படி இருக்கிறார்?
2002 ஆம் ஆண்டு தங்கர் பச்சன் இயக்கத்தில் பார்த்திபன்,நந்திதா தாஸ்,தேவயானி ஆகியோர் நடிப்பில் வெளியான அழகி திரைப்படம்,தமிழ் சினிமாவின் மிகச்சிறந்த கிளாசிக் படங்களில் ஒன்றாக இன்றும் கொண்டாடப்படுகிறது.
இதையும் படியுங்க: சும்மா கெத்தா விலை போன ‘கூலி’ படம் ..இப்பவே பாதி வசூல் ஓவர்.!
இளையராஜாவின் இசையில் வெளியாகிய இப்படம்,முக்கோணக் காதல் கதையை மையமாகக் கொண்டு,ரசிகர்களின் இதயங்களை கொள்ளையடித்தது.

இந்த படத்தில் இளம் வயது பார்த்திபன் கதாபாத்திரத்தில் நடித்த சிறுவன் சதீஷ்,தனது அப்பாவித் தோற்றத்தாலும்,தனித்துவமான நடிப்பாலும் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.குழந்தை நட்சத்திரமாக பிரபலமான அவர்,அதன் பிறகு சினிமாவை விட்டு விலகியே இருந்தார்.
இவருக்கு காதல்,தேவதையை கண்டேன் போன்ற சில திரைப்படங்களில் நடிக்க வாய்ப்புகள் வந்ததாகக் கூறப்படுகிறது.ஆனால்,அவர் அந்த வாய்ப்புகளை பயன்படுத்தவில்லை.சினிமா உலகில் அதிக முனைப்போடும், முயற்சியோடும் இல்லாததால்,சில படங்களை நிராகரித்துள்ளார்.அதனால், சினிமாவை விட்டு, தனது நண்பர்களோடு சொந்தமாக தொழில் செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
சமீபத்தில் சதீஷின் தற்போதைய புகைப்படம் இணையத்தில் பரவி,அழகி படத்தில் நடித்தவரா என்று பலரும் ஆச்சரியமாக கேள்வி எழுப்பு வருகிறார்கள்.

இளைஞராக மாறிய சதீஷ்,மீண்டும் சினிமாவில் நடிக்க வருவாரா? அல்லது அவரது தொழிலையே தொடருவாரா? என்பது ரசிகர்கள் மத்தியில் கேள்வியை உருவாக்கியுள்ளது.
