பாகுபலி, கேஜிஎஃப் படங்களை தூக்கி சாப்பிடப் போகும் தமிழ் திரைப்படம் : என்ன படம் தெரியுமா!!

Author: Udayachandran RadhaKrishnan
16 May 2023, 4:18 pm

தமிழ் சினிமாவில் மிகப்பெரிய வசூல் என்று சமீபத்தில் பார்த்தால் பெரிய அளவுக்கு ஹிட் படங்கள் அமையவில்லை.

குறிப்பாக கடந்த வருடம் வெளியான விக்ரம் படம் தற்போது வரை டாப் வசூல் செய்த திரைப்படங்களில் ஒன்றாக உள்ளது. அதற்கு காரணம் வரலாற்று படங்கள், அதிரடி ஆக்ஷன் படங்களைத்தான் மக்கள் அதிகம் விரும்புகின்றனர்.

பிற மொழிப் படங்களான பாகுபலி, கேஜிஎஃப் 2 பாகங்களும் தமிழகத்தில் மாபெரும் வசூலை வாரிக்குவித்தது. தமிழிலேயே இப்படி என்றால் தெலுங்கில் சூப்பர் டூப்பர் வசூல் செய்தது.

அதை சமீபத்தில் தமிழில் வெளியான பொன்னியன் செல்வன் முறியடிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அந்த கனவும் தவிடு பொடியானது.

இந்நிலையில், இந்த இரு திரைப்படங்களையும் தவிடுபொடியாக்கும் விதமாக தமிழ் சினிமாவில் விரைவில் ஒரு படம் வெளிவரவுள்ளதாம்.

கமல் ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தியன் 2 திரைப்படம் தான் அது என தகவல் வெளியாகியுள்ளது.

இதுவரை எடுத்த இந்தியன் 2 படத்தை கமல் ஹாசனுக்கு சமீபத்தில் போட்டு காட்டியுள்ளாராம் இயக்குனர் ஷங்கர். படத்தை பார்த்த கமல் ஹாசன் பிரமித்து விட்டாராம். படம் கண்டிப்பாக மாபெரும் வெற்றியடையும் என்பது போல் பாராட்டியுள்ளாராம்.

இதனால் கண்டிப்பாக பாகுபலி மற்றும் கே.ஜி.எஃப் படங்களின் பேச்சு கோலிவுட் திரையுலகில் செல்லாது என திரை வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது. பொறுத்திருந்து பார்ப்போம் என்ன நடக்கப்போகிறது என்று.

  • Viduthalai Part 2 OTT releaseஅவ்ளோ தான் முடிச்சு விட்டீங்க போங்க…விடுதலை 2 ஓடிடி-க்கு ஓட்டம்..வெளிவந்த அப்டேட்..!
  • Views: - 920

    8

    4