விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல் தொடர்களுமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வரிசையில், இல்லத்தரசிகள் த்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று டிஆர்பியில் டாப் மூன்று இடத்திற்குள் எப்போதும் இடம் பிடித்து வரும் தொடர் ‘பாக்கியலட்சுமி’.
குடும்ப பெண்கள் நினைத்தால் எதையும் சாதிக்க முடியும் என்கிற பாசிட்டிவான கண்ணோட்டத்தோடு ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியல், மற்ற சீரியல்களுக்கு டஃப் கொடுத்து வருகிறது. பாக்கியா கதாபாத்திரத்தில் நடிகை சுசித்ரா நடித்து வருகிறார். இதற்கு இணையான கதாபாத்திரமான ராதிகா என்னும் முக்கிய கதாபாத்திரத்தில், ரேஷ்மா பசுபுலேட்டி நடித்து வருகிறார்.
ஆரம்பத்தில், அப்பாவியாக இருந்த இந்த கதாபாத்திரம் தற்போது சில வில்லத்தனத்தோடு இருப்பது போல ராதிகா கதாபாத்திரம் காட்டப்பட்டு வருகிறது. இதனிடையே, பாக்கியலட்சுமி சீரியலில் சமீபத்தில் நடிகர் ரஞ்சித் புதியதாக என்ட்ரி கொடுத்தார்.
கோபி குடிப்பழக்கத்தால் அனைவரையும் கஷ்டப்படுத்தி வர இப்போது ராதிகா பாக்கியா வீட்டிற்குள் சென்று அவரை வெளியே செல்ல சொல்கிறார். அடுத்தடுத்து என்ன நடக்கப்போகிறது என்பதை காண மக்களும் ஆர்வமாக உள்ளார்கள்.
இந்நிலையில், இந்த தொடரின் மூலம் மக்களிடம் நன்கு பிரபலமான கோபி கதாபாத்திரத்தில் நடிக்கும் சதீஸ்க்கு மக்களிடம் நல்ல பெயர் உள்ளது.
இதனிடையே, பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து தான் சில எபிசோட்டிற்கு பின் விலகியுள்ளதாக கோபி கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகர் சதீஷ் தெரிவித்துள்ளது அனைவரிடத்திலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பாக்கியலட்சுமி சீரியல் இந்த அளவிற்கு பிரபலமாக முக்கிய காரணமாக இந்த கதாபாத்திரம் கோபி தான்.
தற்போது நடிகர் சதீஷ் வெளியிட்ட வீடியோவில், தனிப்பட்ட காரணத்திற்காக இனிமேல் கோபியாக தன்னால் நடிக்க முடியாது என்று கண்ணீர் விட்டபடி எமோஷ்னலாக தெரிவித்து இருக்கிறார் சதீஷ். இதுகுறித்து, இணையத்தில் அவர் வெளியிட்ட அந்த வீடியோவை பார்த்து ரசிகர்கள் வேண்டாம் என்று கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.