விபத்தில் சிக்கி படுகாயமடைந்த விஜய் டிவி சீரியல் நடிகை.. வெளியான புகைப்படங்கள்..!

Author: Vignesh
13 February 2024, 7:30 pm

இயக்குனர் பாரதிராஜாவால் அறிமுகப்படுத்தப்பட்டவர் தான் கம்பம் மீனா. இவரது நிஜப்பெயர் நாச்சிமுத்து மீனா. கம்பம் மீனா முதன்முதலாக தெற்கத்தி பொண்ணு என்ற சீரியலில் தான் நடிக்க தொடங்கினார்.

kambam meena pandian stores - updatenews360

2001 ஆம் ஆண்டு இயக்குனர் பாரதிராஜா தெற்கத்திபொண்ணு சீரியல் தேனி மாவட்டத்தில் எடுத்துக் கொண்டிருந்தபோது கிராமத்துப் பெண் கதாபாத்திரத்தில் நடித்தார் கம்பம் மீனா.

இவர் விஜய் டிவியில் பாண்டியன் ஸ்டோர், பாக்கியலட்சுமி என பல சீரியல்களில் பிஸியாக தற்போது நடித்து உள்ளார்.

kambam meena pandian stores - updatenews360

சின்ன கிராமத்திலிருந்து வந்து கம்பம் மீனா இன்று சின்னத்திரை, வெள்ளித்திரை என இரண்டிலுமே தன்னுடைய உழைப்பால் பயங்கரமாக கலக்கிக் கொண்டிருக்கிறார்.

பல கஷ்டங்களை கடந்து வந்த கம்பம் மீனா “என் வாழ்க்கையை மாற்றியது சிவ வழிபாடு தான்” என்று அவரே பேட்டி ஒன்றில் தெரிவித்து இருந்தார்.

kambam meena pandian stores - updatenews360

இந்நிலையில், கம்பம் மீனா செல்லமுத்து நேற்று விபத்தில் சிக்கி இருந்ததாகவும், படுகாயம் அடைந்த அவர் கை முறிந்து கட்டுடன் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார். “நேற்று (12/02/2024) இரவு 8.30 மணிக்கு தலைக்கு வந்தது தலைபாகையோடு போய் விட்டது …..(இப்படித்தான் மனதை தேற்றிகொண்டேன்)…..எல்லாம் அவன் செயல்” என கம்பம் மீனா கூறி இருக்கிறார்.

  • Tamannaah Bhatia and Vijay Varma part ways after years of dating காதலரை பிரிந்தார் நடிகை தமன்னா.. இதுக்கும் அவருதான் காரணமா? இன்ஸ்டா பதிவால் பரபர!