நானொரு டம்பி பீஸ்.. ஓவர் அட்வைஸ் எதுக்கு?.. பாக்கியலட்சுமி சீரியல் கோபி வெளியிட்ட Video..!

Author: Vignesh
6 April 2024, 5:36 pm

விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல் தொடர்களுமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வரிசையில், இல்லத்தரசிகள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று டிஆர்பியில் டாப் மூன்று இடத்திற்குள் எப்போதும் இடம் பிடித்து வரும் தொடர் ‘பாக்கியலட்சுமி’.

baakiyalakshmi gopi- updatenews360

மேலும் படிக்க: ICUவில் கவலைக்கிடமான நிலையில் பிரபல நடிகை- சிகிச்சைக்கு உதவி கேட்கும் குடும்பத்தினர்..!

குடும்ப பெண்கள் நினைத்தால் எதையும் சாதிக்க முடியும் என்கிற பாசிட்டிவான கண்ணோட்டத்தோடு ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியல், மற்ற சீரியல்களுக்கு டஃப் கொடுத்து வருகிறது. பாக்கியா கதாபாத்திரத்தில் நடிகை சுசித்ரா நடித்து வருகிறார். இதற்கு இணையான கதாபாத்திரமான ராதிகா என்னும் முக்கிய கதாபாத்திரத்தில், ரேஷ்மா பசுபுலேட்டி நடித்து வருகிறார். ஆரம்பத்தில், அப்பாவியாக இருந்த இந்த கதாபாத்திரம் தற்போது சில வில்லத்தனத்தோடு இருப்பது போல ராதிகா கதாபாத்திரம் காட்டப்பட்டு வருகிறது.

முன்னதாக ஆரம்பத்தில், வில்லன் கதாபாத்திரத்தில் காட்டப்பட்ட கோபி தற்போது ராதிகாவை திருமணம் செய்து கொண்ட பின்னர், காமெடியன் போல மாற்றிவிட்டார் சீரியலின் இயக்குனர். இந்நிலையில், நடிகர் சதீஷ் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருந்து தினமும் காலையில் மக்களுக்கு அட்வைஸ் சொல்லும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அவர் ஓவராக அட்வைஸ் செய்வதாக நெட்டிசன்கள் பலரும் அவரை கமெண்ட்களில் கிண்டல் செய்து வந்தனர்.

மேலும் படிக்க: சின்ன வயசுலே முன்னாள் காதலி தான் நடுவர்-னு தெரியாமல் பாடிய பிரபல இசையமைப்பாளர்.. Unseen Video..!

sathish Gopi-updatenews360

தற்போது, அந்த கமெண்ட்களுக்கு பதிலளிக்கும் வகையில் ஒரு வீடியோவை சதீஷ் வெளியிட்டுள்ளார். அதில், நான் ஒரு டம்மி பீஸ் ஏதாவது சந்தர்ப்ப சூழ்நிலையால் ஆண்டவன் அருளால் பாக்கியலட்சுமி சீரியல் மூலமாக பெயரும் புகழும் வந்திருக்கு நான் யாருக்கும் அறிவுரை சொல்லவில்லை. என் அனுபவத்தை தான் ஷேர் செய்கிறேன் என சதீஷ் பேசியுள்ளார். அந்த வீடியோ தற்போது, இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

  • Keerthy Suresh new glamorous look கவர்ச்சி உடையில் பிரபல நடிகருடன் குத்தாட்டம்…வைரலாகும் கீர்த்தி சுரேஷ் வீடியோ..!
  • Views: - 287

    0

    0