அட இது நம்ம பழைய ராதிகாவாச்சே.. மீண்டும் சீரியலில் நடிக்க வந்த ஜெனிஃபர்..!

Author: Vignesh
4 May 2024, 6:02 pm

விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல் தொடர்களுமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வரிசையில், இல்லத்தரசிகள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று டிஆர்பியில் டாப் மூன்று இடத்திற்குள் எப்போதும் இடம் பிடித்து வரும் தொடர் ‘பாக்கியலட்சுமி’.

baakiyalakshmi gopi- updatenews360

மேலும் படிக்க: ICUவில் கவலைக்கிடமான நிலையில் பிரபல நடிகை- சிகிச்சைக்கு உதவி கேட்கும் குடும்பத்தினர்..!

குடும்ப பெண்கள் நினைத்தால் எதையும் சாதிக்க முடியும் என்கிற பாசிட்டிவான கண்ணோட்டத்தோடு ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியல், மற்ற சீரியல்களுக்கு டஃப் கொடுத்து வருகிறது. பாக்கியா கதாபாத்திரத்தில் நடிகை சுசித்ரா நடித்து வருகிறார். இதற்கு இணையான கதாபாத்திரமான ராதிகா என்னும் முக்கிய கதாபாத்திரத்தில், ரேஷ்மா பசுபுலேட்டி நடித்து வருகிறார். ஆரம்பத்தில், அப்பாவியாக இருந்த இந்த கதாபாத்திரம் தற்போது சில வில்லத்தனத்தோடு இருப்பது போல ராதிகா கதாபாத்திரம் காட்டப்பட்டு வருகிறது.

இந்நிலையில், இந்த சீரியலில் ராதிகா என்னும் கதாபாத்திரத்தில் முதலில் நடித்து வந்தவர் நடிகை ஜெனிபர். இவர் சின்னத்திரை வெள்ளித்திரை இரண்டிலும் பிரபலமான நட்சத்திரமாக இருக்கும் ஜெனிபர். கர்ப்பமாக இருந்த காரணத்தினால் பாக்கியலட்சுமி சீரியலிலிருந்து வெளியேறினார். இதன் பின்னர், எந்த சீரியலிலும் இவர் நடிக்கவே இல்லை. இந்தநிலையில், மீண்டும் சின்னத்துறையில் மாஸ் என்ட்ரீ கொடுத்துள்ளார். அதாவது, நடிகை ஜெனிபர் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் டாப் சீரியலாக ஒளிபரப்பாகி வரும் கார்த்திகை தீபம் சீரியலில் நடிகை ஜெனிஃபர் என்ட்ரீ கொடுத்துள்ளார். மேலும், மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் கார்த்திகை தீபம் சீரியலின் மூலம் சின்னத்திரையில் களமிறங்கிய ஜெனிஃபருக்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

  • Ajith Dhanush New Movie அஜித்துக்காக தனுஷ் எடுக்க போகும் தரமான சம்பவம்…ஒருவேளை இருக்குமோ.!