பாக்கியலட்சுமி சீரியல் நடிகர், நடிகைகளின் ஒரு நாள் சம்பளம்.. தல கிர்ர்ர்ன்னு சுத்துதே..!

Author: Vignesh
26 January 2024, 3:30 pm

பொதுவாக விஜய் டிவியில் காலை முதல் இரவு வரைக்கும் சில சீரியல்கள் ஓடிக்கொண்டிருக்கிறது. சிறகடிக்க ஆசை, பாண்டியன் ஸ்டோர், பாக்கியலட்சுமி, தென்றல் வந்து என்னை தொடும், ஆகா கல்யாணம், காற்றுக்கென்ன வேலி, மகாநதி, என அடுத்தடுத்து சீரியல்கள் ஒளிபரப்பாகிக் கொண்டு இருக்கிறது.

vijay tv

அந்த வகையில், பெண்கள் மத்தியில் சினிமா படங்களை விட சீரியலுக்கு தான் மவுசு ஜாஸ்தி. அதிலும், ஒரு சில சீரியல்களுக்கும் அதில் நடிப்பவர்களுக்கும் தீவிர ரசிகை மற்றும் ரசிகர்கள் இருப்பார்கள். இதில், சினிமாவை போலவே ஹீரோ, ஹீரோயின்கள், வில்லன், நகைச்சுவை நடிகர்கள் என பலரும் நடித்து இருப்பார்கள். அப்படி நீங்கள் விரும்பி பார்க்கும் விஜய் டிவி சீரியலான பாக்கியலட்சுமி சீரியலில் நடிகர், நடிகைகளுக்கு கிடைக்கும் சம்பளம் பற்றி இந்த பதிவில் காண்போம்.

baakiyalakshmi gopi- updatenews360

டிஆர்பியில் முதல் மூன்று இடங்களில் வரும் சீரியலில் பாக்கியலட்சுமி ஒன்று என்று சொல்லலாம். மக்கள் தினமும் ஒரு எதிர்பார்ப்பில் வைத்திருக்கும் சீரியலாகவும் பாக்கியலட்சுமி இருந்து வருகிறது. இத்தொடர் இல்லத்தரசிகளை மையமாக வைத்து தான் கதையை நகர்த்திக் கொண்டு செல்கின்றது.

baakiyalakshmi-updatenews360

இந்த சீரியலில் முதன்மை கதாபாத்திரத்தில் நடந்து வருபவர் சுசித்ரா இவர் ஒரு நாளைக்கு 12,000 ரூபாய் வரை சம்பளமாக பெறுகிறார். அதேபோல் நடிகர் கோபி ஒரு நாளைக்கு 12000 வாங்குகிறாராம். மேலும், எழில் கதாபாத்திரத்தில் நடிக்கும் விஷால் ஜெனி கதாபாத்திரத்தில் நடிக்கும் திவ்யாவிற்கும் ஒரு நாளைக்கு பத்தாயிரம் சம்பளமாக வழங்கப்படுகிறது என கூறப்படுகிறது. செலியன் கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகர் விஷால் ரூபாய் பத்தாயிரம் சம்பளம் வாங்குகிறார்.

baakiyalakshmi gopi- updatenews360

ராதிகாவாக நடிக்கும் ரேஷ்மாவுக்கும் பத்தாயிரம் வழங்கப்படுகிறதாம். இனிய கதாபாத்திரத்தில் நடிக்கும் நேகாவுக்கு 8000 ஒரு நாளைக்கு சம்பளமாக வழங்கி வருகிறார்கள் என தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் இவர்கள் எல்லோரையும் விட ரஞ்சித்துக்கு தான் அதிக சம்பளம் என்று கூறப்படுகிறது ஒரு நாளைக்கு அவர் வாங்கும் சம்பளம் 25 ஆயிரம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது

  • Karthi accident on Sardar 2 set படப்பிடிப்பில் நடிகர் கார்த்திக்கு விபத்து…அவசர அவசரமாக சென்னை திரும்பிய படக்குழு.!