ரெண்டு பொண்டாட்டி கட்டினா இப்படி தான் போல.. சீரியல் நடிகரை கலாய்க்கும் நெட்டிசன்கள்..!
Author: Vignesh19 April 2023, 10:45 am
விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல் தொடர்களுமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வரிசையில், இல்லத்தரசிகள் த்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று டிஆர்பியில் டாப் மூன்று இடத்திற்குள் எப்போதும் இடம் பிடித்து வரும் தொடர் ‘பாக்கியலட்சுமி’.
குடும்ப பெண்கள் நினைத்தால் எதையும் சாதிக்க முடியும் என்கிற பாசிட்டிவான கண்ணோட்டத்தோடு ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியல், மற்ற சீரியல்களுக்கு டஃப் கொடுத்து வருகிறது. பாக்கியா கதாபாத்திரத்தில் நடிகை சுசித்ரா நடித்து வருகிறார். இதற்கு இணையான கதாபாத்திரமான ராதிகா என்னும் முக்கிய கதாபாத்திரத்தில், ரேஷ்மா பசுபுலேட்டி நடித்து வருகிறார்.
ஆரம்பத்தில், அப்பாவியாக இருந்த இந்த கதாபாத்திரம் தற்போது சில வில்லத்தனத்தோடு இருப்பது போல ராதிகா கதாபாத்திரம் காட்டப்பட்டு வருகிறது. இதனிடையே, பாக்கியலட்சுமி சீரியலில் சமீபத்தில் நடிகர் ரஞ்சித் புதியதாக என்ட்ரி கொடுத்தார்.
இரண்டாவது திருமணம் செய்து கொண்டு முதல் மனைவி வீட்டிற்கு வந்திருக்கும் கோபியின் செயல் ரசிகர்களை விறுவிறுப்பாக்கி உள்ளது. கோபியுடன் தான் நான் இருப்பேன் என பையுடன் ராதிகா, பாக்கியாவின் வீட்டிற்கு வந்துள்ளார்.
இந்நிலையில், சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் பாக்கியலட்சுமி கோபி அவ்வப்போது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் ஆகியவற்றை பகிர்வது வழக்கம். அதில் சில வீடியோக்கள் விமர்சகர்கள் கையில் சிக்கி சீரியலை விட்டு விலக போவதாக கூட ட்ரோல் செய்து வந்தது குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில், சமிபத்தில் எலும்புக்கூடுடன் டூயட் பாடும் காட்சியை பகிர்ந்து உள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், “ரெண்டு பொண்டாட்டி கட்டினவர்களின் நிலை இப்படி தான் போல” என கருத்துக்களை பதிவு செய்து உள்ளனர்.