சோலி முடிஞ்சு.. பாக்கியாவுக்கு அடுத்த ஷாக்… 2 வது தேனிலவுக்கு பிளான் போட்ட கோபி: குஷியில் ராதிகா வெளியிட்ட புகைப்படம் இதோ..!

Author: Vignesh
5 October 2022, 2:15 pm

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி தொடர் விறுவிறுப்பின் உச்சமாக ஓடிக் கொண்டிருக்கிறது. முதலில் கோபி பற்றிய நிஜ விஷயங்கள் குடும்பத்திற்கு தெரியவரும் போது பரபரப்பாக ஓடியது.

இப்போது அவர் ராதிகாவை திருமணம் செய்யும் காட்சிகள் ஓடுகிறது, அடுத்து என்ன ஆகும் என்ன ஆகும் என ரசிகர்களை யோசிக்க வைத்துக் கொண்டே இருக்கிறார் இயக்குனர்.

வரவேற்பு நிகழ்ச்சி முடிந்துள்ளது, அதில் ஏகப்பட்ட பிரச்சனைகள் வந்து முடிந்துவிட்டன. அடுத்து என்ன கல்யாணம் தான், அந்த திருமணத்திற்கு கோபியின் அம்மா மற்றும் மகள் வருவதாக புரொமோ வெளியாகிறது.

தற்போது திருமணத்தை முடித்த கோபி ஹனிமூனிற்காக கொடைக்கானல் சென்றிருப்பதாக தெரிகிறது. அங்கு பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பமும் வர மெகா சங்கமம் காட்சிகள் படமாக்கப்படவுள்ளனவாம்.

சீரியல் குழுவினர் ஜோடியாக அங்கு எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் இதோ,

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 546

    0

    0