‘உன்னை பார்த்தால் போதும் எந்தன் அழகு குட்டி செல்லம்..’ சந்தோஷ செய்தியை வெளியிட்ட CWC ரித்திகா..!

Author: Vignesh
15 March 2024, 2:00 pm

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல் தொடர்களுமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வரிசையில், இல்லத்தரசிகள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று டிஆர்பியில் டாப் மூன்று இடத்திற்குள் எப்போதும் இடம் பிடித்து வரும் தொடர் ‘பாக்கியலட்சுமி’.

rithika tamil

இந்த தொடரில் அமிர்தா என்ற கேரக்டரில் நடித்தவர் நடிகை ரித்திகா. அதற்கு முன்னர் ராஜா ராணி நாடகத்தில் கதாநாயகனுக்கு தங்கை கதாபாத்திரத்தில் நடித்தார். ஆனால் இவருக்கு போதிய வரவேற்பு கிடைக்கவில்லை. இருப்பினும் தொடர்ந்து அவர் போராடி வந்தார். பின்னர் நடிகை ரித்திகாவுக்கு குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது.

rithika tamil

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு நடிகை ரித்திகா பல ரசிகர்களைப் பெற்று இருக்கிறார். பாலா உடன் நடிகை ரித்திகா சேர்ந்து செய்த சேட்டைகள் ரசிக்கும்படியாக இருந்தது. நடிகை ரித்திகா சமீபத்தில் விஜய் டிவியில் கிரியேட்டிவ் டைரக்டராக வேலை பார்த்து வரும் வினு என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

rithika tamil

வினு மலையாளி என்பதால் கேரளாவில் உள்ள ஒரு கோவிலில் வைத்து எளிமையாக நடிகை ரித்திகா திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு பிறகு பாக்கியலட்சுமி தொடரிலிருந்து பாதியிலேயே வெளியேறிய இவர் அவ்வப்போது கணவருடன் எடுத்து அழகிய புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட வண்ணம் இருந்தார். தற்போது, கர்ப்பமாக இருப்பதாக சந்தோச செய்தியை வெளியிட்டுள்ளார். அவருக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

  • Karthi accident on Sardar 2 set படப்பிடிப்பில் நடிகர் கார்த்திக்கு விபத்து…அவசர அவசரமாக சென்னை திரும்பிய படக்குழு.!