விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல் தொடர்களுமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வரிசையில், இல்லத்தரசிகள் த்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று டிஆர்பியில் டாப் மூன்று இடத்திற்குள் எப்போதும் இடம் பிடித்து வரும் தொடர் ‘பாக்கியலட்சுமி’.
குடும்ப பெண்கள் நினைத்தால் எதையும் சாதிக்க முடியும் என்கிற பாசிட்டிவான கண்ணோட்டத்தோடு ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியல், மற்ற சீரியல்களுக்கு டஃப் கொடுத்து வருகிறது. பாக்கியா கதாபாத்திரத்தில் நடிகை சுசித்ரா நடித்து வருகிறார். இதற்கு இணையான கதாபாத்திரமான ராதிகா என்னும் முக்கிய கதாபாத்திரத்தில், ரேஷ்மா பசுபுலேட்டி நடித்து வருகிறார்.
ஆரம்பத்தில், அப்பாவியாக இருந்த இந்த கதாபாத்திரம் தற்போது சில வில்லத்தனத்தோடு இருப்பது போல ராதிகா கதாபாத்திரம் காட்டப்பட்டு வருகிறது. இதனிடையே, பாக்கியலட்சுமி சீரியலில் சமீபத்தில் நடிகர் ரஞ்சித் புதியதாக என்ட்ரி கொடுத்தார்.
இந்நிலையில், கோபி பாக்கியா மீது உள்ள வெறுப்பால் மறுமணம் செய்து கொண்டு தன்னுடைய அழகிய வாழ்க்கையை இழந்துவிட்டார் என்பது ரசிகர்கள் பலரின் கருத்தாகவே உள்ளது. இதனிடையே, இனியா பனிரெண்டாம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்து விட்டதால், அடுத்து அவர் என்ன படிக்கலாம் என்ற வாதம் வர கோபி ஒரு படிப்பை கூற அவரது மகளோ வேறு ஒரு படிப்பில் பிளானில் இருக்கிறார். இதற்கு பாக்யாவும், சப்போர்ட் செய்து வருகிறார்.
இந்நிலையில், தற்போது சமூக வலைதளங்களில் பாக்கியலட்சுமி சீரியல் படப்பிடிப்பிலிருந்து எடுக்கப்பட்ட ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அதாவது கோபி தனது முன்னாள் மனைவி பாக்யாவை கட்டி அனைத்து முத்தம் கொடுக்கச் செல்ல அதை இனியா வீடியோவாக எடுக்கிறார்.
இந்த கலகலப்பான வீடியோ சாதாரணமாக எடுக்கப்பட்டதாக தெரிகிறது. இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் இதை மட்டும் ராதிகா பார்க்க வேண்டும் அப்போது கோபி கதை கதையாக உளறுவார் என கமெண்ட் செய்து வருகின்றனர். மேலும், கெட்ட பையன் சார் இந்த கோபி என்றும் பதிவிட்டு வருகிறார்கள்.
திணறிய பாகிஸ்தான் பேட்ஸ்மன்கள் இன்று துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் முதலில் டாஸ் வின் பண்ணி…
தன்னுடைய படம் மூலம் பதிலடி கொடுத்த அஸ்வத் மாரிமுத்து பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டிராகன் திரைப்படம் 21 ஆம் தேதி…
ரசிகரின் செயலால் கடுப்பான உன்னி முகுந்தன் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் உன்னி முகுந்த்,சமீபத்தில் இவருடைய…
வசூலில் மந்தமாகும் NEEK தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் பல திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது .அந்த வகையில்…
விஜய் நடிக்காதற்கு காரணம் என்ன விஷால் நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சண்டக்கோழி,இப்படம் பக்கா…
அரையிறுதி வாய்ப்பு யாருக்கு கிரிக்கெட் வரலாற்றில் பல வருடமாக இந்தியா பாகிஸ்தான் ஆட்டம் என்றாலே அதற்கு தனி எதிர்பார்ப்பு ரசிகர்களிடம்…
This website uses cookies.