மேக்கப் இல்லாமலும் அழகு.. பாக்கியலட்சுமி சீரியல் நடிகை வெளியிட்ட புகைப்படம்..!

Author: Vignesh
27 April 2024, 11:44 am

விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல் தொடர்களுமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வரிசையில், இல்லத்தரசிகள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று டிஆர்பியில் டாப் மூன்று இடத்திற்குள் எப்போதும் இடம் பிடித்து வரும் தொடர் ‘பாக்கியலட்சுமி’.

baakiyalakshmi gopi- updatenews360

குடும்ப பெண்கள் நினைத்தால் எதையும் சாதிக்க முடியும் என்கிற பாசிட்டிவான கண்ணோட்டத்தோடு ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியல், மற்ற சீரியல்களுக்கு டஃப் கொடுத்து வருகிறது. பாக்கியா கதாபாத்திரத்தில் நடிகை சுசித்ரா நடித்து வருகிறார். இதற்கு இணையான கதாபாத்திரமான ராதிகா என்னும் முக்கிய கதாபாத்திரத்தில், ரேஷ்மா பசுபுலேட்டி நடித்து வருகிறார்.

ஆரம்பத்தில், அப்பாவியாக இருந்த இந்த கதாபாத்திரம் தற்போது சில வில்லத்தனத்தோடு இருப்பது போல ராதிகா கதாபாத்திரம் காட்டப்பட்டு வருகிறது. இதனிடையே, பாக்கியலட்சுமி சீரியலில் சமீபத்தில் நடிகர் ரஞ்சித் புதியதாக என்ட்ரி கொடுத்தார்.

bhagyalakshmi -updatenews360 2

இந்த சீரியலில் கதாநாயகியாக நடிகை சுஜித்ரா நடித்துள்ளார். இவரது எதார்த்தமான நடிப்பு இல்லத்தரசிகளை அதிகமாகவே கவர்ந்துள்ளது. பாக்யாவிற்கு உதவியாக கம்பன் மீனா நடித்துள்ளார். தற்போது, இவர்கள் இருவரும் துளியும் மேற்கும் இல்லாமல் எடுத்துக் கொண்ட புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தை சென்னை காளிகாம்பாள் கோவிலில் தரிசனம் செய்யும் போது எடுக்கப்பட்டதாக சுஜித்ரா ஒரு பதிவை பதிவிட்டுள்ளார்.

bhagyalakshmi -updatenews360 2
bhagyalakshmi -updatenews360 2

  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி