புது பொண்டாட்டி கிடைச்ச பிறகு அந்த ஆசை அதிமாகிடுச்சு – முதல் மனைவி விவாகரத்து குறித்து பப்லு!

Author: Shree
13 April 2023, 12:56 pm

90ஸ் கிட்ஸ்களுக்கு பரீட்சியமான சின்னத்திரை நடிகர் பப்லு. இவர் தமிழ் தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார். ஆனால் இவர் பிரபலமானது தொலைக்காட்சி தொடர்களின் மூலம் தான். தற்போது 56 வயதாகும் பப்லு கட்டுமஸ்தான தோற்றத்தை வைத்து இளமையாக தோன்றுகிறார்.

இவர் நடன நிகழ்ச்சிகளில் கூட பங்கேற்று பிரபலமானார். ஜோடி நம்பர் ஒன் நிகழ்ச்சியில் பங்கேற்றபோது அந்நிகழ்ச்சியின் நடுவரான சிலம்பராசனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்னர் 2014 ஆண்டில் ஒளிபரப்பாகத் தொடங்கிய வாணி ராணி தொலைக்காட்சித் தொடரில் முதன்மைப் பாத்திரம் ஏற்று நடித்தார்.

prithviraj babloo - update

இவர் மலேசியா சென்றுவந்த பிறகு அங்கு கிடைத்த அனுபவத்தை வைத்து சென்னை, பெசண்ட் நகரில் சா ரிபப்ளிக், பப்லி டீ ஷாப் என்ற தேனீர் கடையைத் துவக்கினார். இதனிடையே இவர் பீனா என்ற பெண்ணை கடந்த 1994ம் ஆண்டு திருமணம் செய்துக்கொண்டார். பின்னர் அவரை விவாகரத்து செய்துவிட்டு பிரிந்தார். இவர்களுக்கு ஆட்டிசம் குறைபாடு உள்ள ஒரு மகன் இருக்கிறான்.

இப்படியான நேரத்தில் பப்லு ஷீத்தல் என்கிற 24 வயது பெண்ணை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார் இது பெரும் விமர்சனத்திற்கு உள்ளானது. இந்நிலையில் முதல் மனைவி விவகாரத்து செய்தது பற்றி கூறியுள்ள பப்லு, “நாங்கள் நல்ல நண்பர்களாக இருந்து தான் காதலித்து திருமணம் செய்துக்கொண்டோம். ஆரம்பத்தில் நல்லா தான் போச்சு. பின்னர் இருவருக்கும் அடிக்கடி சண்டை ஏற்பட்டது இதனால் தனித்தனியாக வாழ்ந்து வந்தோம்.

அது மட்டுமல்லாமல் ஒரு முறை, ஒரு நிகழ்ச்சியில் நானும் அவரும் கலந்துகொண்ட போது தொகுப்பாளர், உங்கள் கணவர் அழகாக இருக்கிறார். அவரை ஹக் பண்ணுவதற்கு நீங்கள் சந்தோஷப்படுகிறீர்களா? என்று கேட்டதற்கு, யார் இவனா? என்று கேட்டு சிரித்தார். அது தன்னை மிகவும் காயப்படுத்திவிட்டது. அதை பெரிய அபின்னர் பல வருட தனிமைக்கு பின் ஷீத்தல் அறிமுகமானார். அவர் என்னையும் என் மகனையும் பார்த்துக்கொள்வார் என நம்பிக்கை வந்தது உடனே திருமணம் செய்துக்கொண்டேன். இப்போது இந்த வாழ்க்கையில் காதலிக்கும் ஆசை அதிகம் வருகிறது என்றார்.

பப்லு பிரித்திவிராஜ் (Babloo Prithiveeraj பிறப்பு 18 சூலை 1966) என்பவர் ஓர் இந்திய திரைப்பட நடிகர். இவர் தமிழ் தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழித் திரைப்படங்களில் தோன்றியுள்ளார். மேலும் இவர் 1990கள் மற்றும் 2000களில் தமிழ் தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்துள்ளார்.

  • Allu Arjun Pushpa 2 Global Successடாப் கியரில் புஷ்பா 2…மெகா வசூலால் பதிலடி கொடுக்கும் அல்லு அர்ஜுன்..!
  • Views: - 795

    6

    9