7 மாதத்தில் இரண்டாவது மனைவியை பிரிந்த பப்லு… உறுதிப்படுத்திய ஷீத்தல்!

Author: Shree
2 December 2023, 11:24 am

பிரபல தொலைக்காட்சி நடிகரான பப்லு பிரித்திவிராஜ் தமிழ் தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார். 1990கள் மற்றும் 2000களில் தமிழ் தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்து பேமஸ் ஆன இவர் 90ஸ் கிட்ஸ்களுக்கு பரீட்சியமான நடிகராக இருந்து வந்தார்.

இவர் நடன நிகழ்ச்சிகளில் கூட பங்கேற்று பிரபலமானார். ஜோடி நம்பர் ஒன் நிகழ்ச்சியில் பங்கேற்றபோது அந்நிகழ்ச்சியின் நடுவரான சிலம்பராசனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்னர் 2014 ஆண்டில் ஒளிபரப்பாகத் தொடங்கிய வாணி ராணி தொலைக்காட்சித் தொடரில் முதன்மைப் பாத்திரம் ஏற்று நடித்தார்.

இவர் மலேசியா சென்றுவந்த பிறகு அங்கு கிடைத்த அனுபவத்தை வைத்து சென்னை, பெசண்ட் நகரில் சா ரிபப்ளிக், பப்லி டீ ஷாப் என்ற தேனீர் கடையைத் துவக்கினார். இதனிடையே இவர் பீனா என்ற பெண்ணை கடந்த 1994ம் ஆண்டு திருமணம் செய்துக்கொண்டார். பின்னர் அவரை விவாகரத்து செய்துவிட்டு பிரிந்தார். இவர்களுக்கு ஆட்டிசம் குறைபாடு உள்ள ஒரு மகன் இருக்கிறான்.

இப்படியான நேரத்தில் பப்லு ஷீத்தல் என்கிற 24 வயது பெண்ணை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார் இது பெரும் விமர்சனத்திற்கு உள்ளானது. அவ்வப்போது மனைவியுடன் கொஞ்சல் , ரொமான்ஸ் , வானத்தில் ப்ரொபோஸ் என சமூகவலைதளவாசிகளை செம கடுப்பேற்றி வந்த பப்லு தற்போது இரண்டாம் மனைவியையும் பிரிந்துவிட்டாராம்.

ஆம், ஷீத்தல் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பப்லுவுடன் எடுத்துக்கொண்ட வீடியோ மற்றும் புகைப்படங்களை டெலீட் செய்துள்ளார். இதையடுத்து பப்லுவை பிரிந்துவிட்டார் போல என நெட்டிசன்ஸ் கமெண்ட்ஸ் செய்த அதற்கு லைக்ஸ் போட்டு பிரிவை உறுதிப்படுத்தியுள்ளார் கப் கேக் ஷீத்தல். இதையடுத்து நெட்டிசன்ஸ் பலரும் இந்த ஜோடியை ட்ரோல் செய்து வருகின்றனர்.

  • anthanan funny criticize on good bad ugly movie ரசிகர் மன்றத் தலைவர் எடுத்த படம் மாதிரி இருக்கு- GBU-வை கண்டபடி கலாய்த்த பிரபலம்
  • Close menu