என் அழுக்கு ஜட்டியை எடுத்து… ஷீத்தல் உடனான பிரிவு குறித்து மனம் திறந்த பப்லு!

பிரபல தொலைக்காட்சி நடிகரான பப்லு பிரித்திவிராஜ் தமிழ் தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார். 1990கள் மற்றும் 2000களில் தமிழ் தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்து பேமஸ் ஆன இவர் 90ஸ் கிட்ஸ்களுக்கு பரீட்சியமான நடிகராக இருந்து வந்தார்.

இவர் நடன நிகழ்ச்சிகளில் கூட பங்கேற்று பிரபலமானார். ஜோடி நம்பர் ஒன் நிகழ்ச்சியில் பங்கேற்றபோது அந்நிகழ்ச்சியின் நடுவரான சிலம்பராசனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்னர் 2014 ஆண்டில் ஒளிபரப்பாகத் தொடங்கிய வாணி ராணி தொலைக்காட்சித் தொடரில் முதன்மைப் பாத்திரம் ஏற்று நடித்தார்.

இவர் மலேசியா சென்றுவந்த பிறகு அங்கு கிடைத்த அனுபவத்தை வைத்து சென்னை, பெசண்ட் நகரில் சா ரிபப்ளிக், பப்லி டீ ஷாப் என்ற தேனீர் கடையைத் துவக்கினார். இதனிடையே இவர் பீனா என்ற பெண்ணை கடந்த 1994ம் ஆண்டு திருமணம் செய்துக்கொண்டார். பின்னர் அவரை விவாகரத்து செய்துவிட்டு பிரிந்தார். இவர்களுக்கு ஆட்டிசம் குறைபாடு உள்ள ஒரு மகன் இருக்கிறான்.

இப்படியான நேரத்தில் பப்லு ஷீத்தல் என்கிற 24 வயது பெண்ணை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார் இது பெரும் விமர்சனத்திற்கு உள்ளானது. அவ்வப்போது மனைவியுடன் கொஞ்சல் , ரொமான்ஸ் , வானத்தில் ப்ரொபோஸ் என சமூகவலைதளவாசிகளை செம கடுப்பேற்றி வந்த பப்லு தற்போது இரண்டாம் மனைவியையும் பிரிந்துவிட்டாராம்.

ஆம், ஷீத்தல் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பப்லுவுடன் எடுத்துக்கொண்ட வீடியோ மற்றும் புகைப்படங்களை டெலீட் செய்துள்ளார். இதையடுத்து பப்லுவை பிரிந்துவிட்டார் போல என நெட்டிசன்ஸ் கமெண்ட்ஸ் செய்த அதற்கு லைக்ஸ் போட்டு பிரிவை உறுதிப்படுத்தியுள்ளார் கப் கேக் ஷீத்தல். இதையடுத்து நெட்டிசன்ஸ் பலரும் இந்த ஜோடியை ட்ரோல் செய்தனர்.

பப்லு தன் மகனை பார்த்துக்கொள்ளவேண்டும் என்பதற்காக ஷீத்தலை திருமணம் செய்யாமலே குடும்பம் நடத்தி வந்துள்ளார். ஒரு கட்டத்திற்கு மேல் நம்பிக்கை இழந்த ஷீத்தல் சுயநலமாக இருக்கும் உன்னுடன் வாழவே பிடிக்கவில்லை என கூறி அவருடன் சண்டையிட்டு பப்லுவை பிரிந்துவிட்டதாகவும் பப்லுவின் வயது ஷீத்தலுக்கு மிகப்பெரிய சங்கட்டமாக இருந்ததாகவும் வெளிவரும் செய்திகள் கூறுகிறது.

இந்நிலையில் இதுகுறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய பப்லு, நாங்கள் பிரிந்துவிட்டோம் என்று ஷீத்தல் சொன்னாரா? அல்லது நான் சொன்னேனா? நீங்களா நாங்க பிரிந்துவிட்டோம் என்று கதை கட்டுறீங்க… நீங்களா நாங்க சேர்ந்துவிட்டோம் என்று சொல்றீங்க… ” என்னுடைய அழுக்கு ஜட்டியை பொதுவெளியில் துவைக்க நான் விரும்பவில்லை” அதாவது, நான் அழுக்கு ஜட்டி என்று கூறுவது என்னுடைய தனிப்பட்ட மோசமான விஷயங்களை பற்றி பொதுவெளியில் பேச விரும்பவில்லை. அது எனக்கு அவசியமும் இல்லை. வாழ்ந்தால் வாழ்த்துவதற்கு 10 பேர் இருப்பாங்க அதே போல் விமர்சிப்பதற்கு 10 பேர் இருப்பாங்க என்று பப்லு வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

UpdateNews360 Rajesh

Recent Posts

திமுகவில் பதவி வகிக்க தகுதியில்லாத பொன்முடிக்கு அமைச்சர் பதவி எதுக்கு? வானதி சீனிவாசன் கொந்தளிப்பு!

விழுப்புரத்தில் நடைபெற்ற தந்தை பெரியார் திராவிடர் கழக நிகழ்ச்சியில் பேசிய, திமுக துணைப் பொதுச்செயலாளரும், வனத்துறை அமைச்சருமான க.பொன்முடி, விலைமாதர்…

4 minutes ago

பிரபுதேவாவால் பெண்டு கழண்டுப்போன டான்சர்கள்- இவ்வளவு ஸ்ட்ரிக்ட்டான ஆளா இவரு?

இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் என போற்றப்படும் பிரபுதேவா, மிகப் பிரபலமான நடிகர் மட்டுமல்லாது மிகச் சிறந்த…

21 minutes ago

என்னைய இப்படி காமிச்சிருக்கியேடா- ஆதிக் ரவிச்சந்திரனிடம் அஜித் சொன்ன GBU விமர்சனம்?

ரசிகர்களுக்கான திரைப்படம் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் நேற்று வெளியான நிலையில் அஜித்…

1 hour ago

தல சுற்ற வைக்கும் GBU முதல் நாள் வசூல் வேட்டை… எவ்வளவு கலெக்ஷன் தெரியுமா?

அஜித்தின் குட் பேட் அக்லி நேற்று உலகம் முழுவதும் வெளியானது. ரசிகர்களை திருப்திப்படுத்தும் விதமாக படம் வந்துள்ளதாக ரசிகர்கள் உற்சாகமாக…

2 hours ago

அமைச்சர் பொன்முடியின் பதவி பறிப்பு.. முதலமைச்சர் ஸ்டாலின் அதிரடி உத்ததரவு!

திமுகவில் வனத்துறை அமைச்சராக இருப்பவர் பொன்முடி. இவர் மீது ஏராளமான சர்ச்சைகள் உள்ளது. இவர் பேசும் பேச்சு எப்போதும் சர்ச்சையை…

2 hours ago

திமுக அமைச்சர் பொன்முடியின் ஆபாச பேச்சு… கொந்தளித்த கனிமொழி எம்பி : என்ன நடந்தது?

திமுகவில் வனத்துறை அமைச்சராக இருப்பவர் பொன்முடி. இவர் மீது ஏராளமான சர்ச்சைகள் உள்ளது. இவர் பேசும் பேச்சு எப்போதும் சர்ச்சையை…

2 hours ago

This website uses cookies.