வீரம் படத்தின் குட்டி பாப்பா யுவினாவின் லேட்டஸ்ட் வீடியோ… அழகில் ஹீரோயினே தோற்றுப்போயிட்டாங்க!
Author: Rajesh23 January 2024, 3:47 pm
சிறுத்தை சிவா இயக்கத்தில் கடந்த 2014ம் ஆண்டு வெளியான திரைப்படம் வீரம். அஜித்தின் மிரட்டலான ஆக்ஷன் காட்சிகளை கொண்டு வெளியான இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடிகை தமன்னா நடித்திருந்தார். இந்த படம் மாபெரும் வெற்றி படமாக அமைந்தது.

இப்படம் தெலுங்கு, இந்தி என மற்ற மொழிகளிலும் வெளியானது. ஆனால், தமிழில் தான் அதிகம் வசூல் குவித்து சாதனை படைத்தது. இப்படத்தில் குழந்தையாக நடித்து பிரபலம் ஆனவர் பேபி யுவினா பார்வதி. பப்ளி அழகில் கொழுக் மொழுக் லுக்கில் நடித்து ரசிகர்கள் எல்லோரது மனதிலும் நீங்காத இடத்தை பிடித்தார்.
அவ்வப்போது பேபி யுவினாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்து. இந்நிலையில் தற்ப்போது யுவினாவின் லேட்டஸ்ட் வீடியோ ஒன்று அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. அதில் டீனேஜ் வயதில் பார்க்கவே ரொம்ப அழகாக ஹீரோயின் போன்று இருக்கும் யுவினாவை பார்த்து நெட்டிசன்ஸ் வர்ணித்துள்ளனர்.