SJ சூர்யாவுக்கு இப்படி ஒரு மனநோயா?.. பகீர் கிளப்பும் பயில்வான்..!

Author: Vignesh
23 September 2023, 11:15 am

வித்யாசமான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை மிரவைப்பவர் எஸ்ஜே சூர்யா. திரைக்கதை ஆசிரியர், நடிகர், மற்றும் திரைப்படத் தயாரிப்பாளர் என பல திறமைகளை கொண்டிருக்கிறார். அஜித் நடித்த வாலி, விஜய்யின் குஷி ஆகிய வெற்றி படங்களை இயக்கி பிரபலமான எஸ்.ஜே.சூர்யா, பின்னர் கதாநாயகனாக நடிக்க தொடங்கினார்.

நியூ, அன்பே ஆருயிரே, வியாபாரி , நியூட்டனின் மூன்றாம் விதி , இறைவி , மெர்சல் , மாநாடு , டான் , வாரிசு என பல படங்களில் நடித்திருக்கிறார். குறிப்பாக வில்லனாக அவர் நடிக்கும் கதாபாத்திரங்கள் அனைவரது மனதிலும் அழுத்தமாக நின்றுவிடும். தமிழ், தெலுங்கு மொழி ரசிகர்களுக்கு பிரபலமானவராக பார்க்கப்படுகிறார்.

சமீபத்தில் அவர் நடிக்கும் படங்களில் அவருக்கான ஸ்கோப் மிகவும் கச்சிதமாக அமைந்திருக்கும் அப்படி நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார் எஸ் ஜே சூர்யா. நேரம் நன்றாக பேசிக்கொண்டு இருப்பார் திடீரென கத்துவார். மற்றவர்கள் ஒரு விஷயத்தை பார்த்தால் எஸ்.ஜே சூர்யா அதை வேறு விதமாகத்தான் பார்ப்பார். இப்படி இருக்கும்போது பயில்வான் ரங்கநாதன் எஸ் ஜே சூர்யாவிற்கு ஒரு விதமான மனநோய் இருப்பதாக கூறி ரசிகர்களிடையே ஷாக் கொடுத்துள்ளார்.

அதை பலமுறை விஷாலே தெரிவித்து இருக்கிறார். மார்க் ஆண்டனி படத்தில் சரியான கதாபாத்திரத்தை அவர் கொடுத்திருப்பதாகவும், அப்படத்தில் எப்படி இருக்கிறாரோ, அதே போல் தான் நிஜத்திலும் இருப்பார். பேசிக் கொண்டிருக்கும் போதே திடீரென கத்துவார். ஒருமுறை தன் உதவியாளர் மது அருந்த கிளாஸ் கொடுத்த போது கழுவியாச்சா என்று கேட்டுள்ளார்.

s j surya - updatenews360

புது கிளாஸ் தான் என்று கூறி இருக்கிறார் உதவியாளர். புதுசா இருந்தா என்ன கழுவக்கூடாதா போய் கழுவிட்டு வா என்று சொல்லி இருக்கிறார். நம்பிக்கை இல்லாமல் தான் எஸ்.ஜே. சூர்யா அந்த கிளாஸ் கழுவச் சொல்லி இருப்பதாகவும், இப்படி ஒரு மனநோய் அவருக்கு இருப்பதாக விஷால் வெளிப்படையாக கூடியதோடு, அதற்கு ஓசிடி என்றுதான் அந்த மனநோய்க்கு அர்த்தம் என்று விஷால் கூறியதாக பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ளார்.

  • thalapathy vijay vs thalapathy movie on same day தளபதியுடன் மோதும் தளபதி? அடேங்கப்பா, இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!