கணவரை பிரிந்த ரம்யா கிருஷ்ணன்?.. எல்லாம் அதுக்காக தானா.. ராஜமாதாவை சீண்டிய பத்திரிக்கையாளர்..!

Author: Vignesh
26 January 2024, 4:15 pm

தமிழ் சினிமாவில் 80 90களில் கொடி கட்டி பறந்த நடிகைகளில் ரம்யா கிருஷ்ணனும் ஒருவர். இவர் தன்னுடைய 14 வயதில் சினிமாவில் அறிமுகமாகி முதல் படமே இவருக்கு பெரும் தோல்வி படமாக அமைந்தது. அதன் பிறகு ரம்யா கிருஷ்ணன் முதல் வசந்தம் படத்தில் நடித்து நல்ல வரவேற்பை பெற்றார்.

ramya krishnan - update news 360

மலையாளம், கன்னடம், ஹிந்தி என வாய்ப்புகள் தேடி வர, ரம்யாவின் புகழ் மேலும் விரிவடைந்தது. இளம் நடிகர்களான சிம்பு, ஷாம், நரேஷ் ஆகியோருடன் குத்தாட்டம் போட்டு பரபரப்பை ஏற்படுத்தியவர். அதன்பின் பல படங்களில் நடித்து வந்தாலும் ரம்யா கிருஷ்ணனுக்கு போதிய அங்கீகாரமும் அடையாளமும் கிடைக்கவில்லை என்று சொல்லலாம். இவர் பல ஆண்டுகள் கழித்து படையப்பாவின் நீலாம்பரியாக நடித்தது மிகப் பெரிய அளவில் இவருக்கு கை கொடுத்தது.

அதன் பிறகு பாகுபலி படத்தில் சிவகாமி தேவி மேலும் இவருக்கு அதிகப்படியான வரவேற்பு கொடுத்தது. இவரை அனைவரும் ராஜமாதாவாகவே கருதினர். இவரை தவிர யாராலும் அந்த கதாபாத்திரத்தில் கச்சிதமாக நடித்திருக்க முடியாது என்று சொல்லும் அளவிற்கு இவரது நடிப்பு அருமையாக இருந்தது. தற்போது ரம்யா கிருஷ்ணன் நடிப்பில் வெளியாகியுள்ள ஜெயிலர் படம் திரையில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

ramya krishnan - updatenews360

இந்நிலையில், சமீபத்தில் வெளியான ஜெயிலர் படத்தில் ரஜினிகாந்துக்கு மனைவியாக ரம்யா கிருஷ்ணன் நடித்து அமோக ரசிகர்களின் வரவேற்பை பெற்றிருந்தார். இதனிடையே, சமீபத்தில் ரம்யா கிருஷ்ணன் ஒருநாள் பத்திரிகையாளர் சந்திக்கும்போது ஒரு பத்திரிக்கையாளர் நீங்கள் உங்கள் கணவருடன் சேர்ந்து வாழ வில்லையா என்று கேட்டனர்.

அதற்கு டென்ஷனான ரம்யா கிருஷ்ணன் ஏன் நீங்கள் பார்த்தீர்களா நாங்கள் இருவரும் சேர்ந்துதான் வாழ்கிறோம். அவர் டோலிவுட்டில் பிஸியாக இருக்கிறார். இருவருமே பிசியாக இருந்து வருகிறோம் என ரம்யா கிருஷ்ணன் கோபமாக பதில் சொன்னதாக பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ளார்.

ramya krishnan - updatenews360

  • Redin Kingsley and Sangeetha Announce Pregnantவீட்டுல விஷேசம்… குட்டி கிங்கிஸ்லி Coming Soon : வெளியான வீடியோ!
  • Views: - 419

    0

    0