நீ என்கிட்ட.. அத சொல்லட்டா?.. ஷர்மிலி அண்ட புளுகு.. முகத்திரையை கிழித்த பயில்வான்..!

பிரபல சினிமா நடிகரும் விமர்சகருமான பயில்வான் ரங்கநாதன் சமீபத்தில் வெளியிட்ட வீடியோவில் நடிகை ஷர்மிலியை வம்பு இழுத்துள்ளார். அதாவது, கவர்ச்சி நடிகை ஷர்மிலி நன்றி கெட்ட தனமாக பேசி வருவதாகவும், எல்லா விஷயத்திற்கும் மன்னிப்பு உண்டு செய்நன்றி மறந்தவருக்கு மன்னிப்பே கிடையாது என்று பயில்வான் அந்த வீடியோவில் ஷர்மிலியை கழுவி ஊற்றியுள்ளார்.

கவர்ச்சி நடிகை ஷர்மிலி என்று சொன்னாலே ஊருக்கு தெரிகிறது. அதற்கு ஒரே காரணம் நடிகர் கவுண்டமணி தான் என்றும், சத்தியமா சொல்றேன் எனக்கு தெரியும் என்றும், அது தான் ஷர்மினியுடன் அப்பாவாகவும், காதலனாகவும் நடித்திருக்கிறேன் என்றும், ஷர்மிலி யார் என்பதை தான் நேரில் பார்த்தவன் என்றும், ரஜினியின் தர்மதுரை சூட்டிங் மைசூரில் நடந்த சமயத்தில் குரூப் டான்ஸராக அறிமுகம் ஆனவர்தான் ஷர்மிலி எனவும் தெரிவித்துள்ளார்.

அதன் பிறகு கவுண்டமணிக்கு ஜோடியாக நடித்த பின்பு தான் இவர் தெரிய வந்ததாகவும், அதற்கு முன் குருப் டான்சராக மட்டுமே தான் ஆடி வந்ததாகவும், கவுண்டமணியுடன் நடித்த பிறகுதான் ஷர்மிலிக்கு சம்பளமே ஏறியது என்றும், கவுண்டமணி இல்லை என்றால், ஷர்மிலிக்கு இந்த நிலையை இருந்திருக்காது.

இந்த நிலைக்கு வந்திருக்க மாட்டார் ஒரு குரூப் டான்ஸருக்கு ஒருநாள் சம்பளம் 1500 ஆனால் அதே ஷர்மிலிக்கு கவுண்டமணி வாங்கி தந்த சம்பளம் ரூபாய் 50,000 என்றும், ரூபாய் 1500 எங்கே இருக்கிறது 50000 எங்கே இருக்கிறது தன்னை ஒப்பந்தம் செய்ய வரும் தயாரிப்பாளர் இயக்குனர்களிடம் ஷர்மிலியை போட்டுக்கோப்பா என்றுதான் கவுண்டமணி சொன்னதாகவும், தனக்கு அந்த விஷயம் நன்றாக தெரியும். இது ஷர்மிலிக்கும் தெரியும் எனவும் பயில்வான் தெரிவித்துள்ளார்.

அதே சமயத்தில் கவுண்டமணி கொடுத்த கால்ஷூட்டில் தான் ஷர்மிலி நடிக்கும் என்றும், அந்த நேரத்தில் சிரஞ்சீவி படத்தில் டான்ஸ் ஆட சர்மிளுக்கு வாய்ப்பு வந்த நிலையில், அதை கவுண்டமணி தடுத்து விட்டதாகவும், எப்படி விடுவார் படத்தின் ஷூட்டிங் போது எப்படி விட முடியும் என்று பயில்வான் கேள்வி எழுப்பியிருந்தார்.

உடனே, அவருக்கு கிடைத்த வாய்ப்பை கவுண்டமணி தடுத்து விட்டதாக ஷர்மிலி கூறி வருகிறார். ஏமா சோலோ டான்ஸ் ஆடினதை விட உனக்கு சம்பளம் அதிகமாக கொடுத்தவர் கவுண்டமணி என்றும், எத்தனை படத்தில் லட்சம் லட்சமாக சம்பாதிச்சீங்க பிளாட் வாங்கினீங்க வெளிநாட்டுக்கு போனீங்க என்றும், ஷர்மிலி ஒருவரை நிச்சயம் செய்து கொண்டு இரண்டு ஆண்டுகள் வெளிநாட்டில் வாழ்ந்தார். அதன் பின் இங்கு வந்துவிட்டார். ஒப்பந்தத்தின் அடிப்படையில் தான் அந்த வாழ்க்கையும் வாழ்ந்தார் என்று ஷர்மிலியின் சொந்த விஷயங்களையும் இந்த வீடியோவில் கிளறி இருந்தார் பயில்வான்.

இதையெல்லாம் நான் சொல்லலாம்ல என்னுடன் கூட நீங்கள் மனசு விட்டு பேசி உள்ளீர்கள். நான் எப்போதும் கவுண்டமணியை தவறாக பேசமாட்டேன் பலவீனத்தை வேண்டுமானால் கூறி இருப்பேன் எனவும், கவுண்டமணி கூட நடித்ததால் எனக்கு உயர்வு வந்திருக்கிறது நான் என்றும் கவுண்டமணிக்கு நன்றி உள்ளவனாக இருப்பேன் ஷர்மிலி என்ன சொல்லுது என் வாழ்க்கையே கெடுத்ததே கவுண்டமணி தான் என்றும், ஏமா எவ்வளவு பெரிய பொய் அந்த ஆண்டவன் கூட உன்னை மன்னிக்க மாட்டார் என்றும், இந்த வயதில் கர்ப்பமாகி குழந்தை பெறப் போகிறாய் நன்றாக குழந்தை பிறக்கட்டும் நன்றாக வாழட்டும் அவரை நான் வாழ்த்துகிறேன் ஆனால் கவுண்டமணி பற்றி பேசியதற்கு ஷர்மிலி பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

ஆவாரம்பூ படத்தில் ஷர்மிலியை தூக்கி இறக்கியதால் தனக்கு பல படங்களில் நடிக்கும் வாய்ப்பை தடுத்தார் கவுண்டமணி. ஆனாலும், தான் மறக்கவில்லை இன்றும் அவருக்கு நன்றியோடு தான் இருக்கிறேன். இது ஷர்மிலிக்கு தெரியும் அடையாளம் புகழ் பணம் கொடுத்த கவுண்டமணியை இப்படி எல்லாம் பேசாதீங்க ஷர்மிலி என்று அவருக்கு அறிவுரையும் கூறியுள்ளார். மேலும் தொடர்ந்து அவரை அவதூறு செய்யாதீர்கள் ஷர்மிலி இது உங்களுக்கு உங்கள் சொந்தக்காரனின் வேண்டுகோள் என்றும் பயில்வான் அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார்.

Poorni

Recent Posts

‘ஜெயலலிதா’ அம்மாவே சொல்லி இருக்காங்க..பிரபுதேவா நிகழ்ச்சியில் வடிவேல் பர பர பேச்சு.!

பிரபுதேவா நடன நிகழ்ச்சியில் வடிவேல் பேச்சு நடிகரும் நடன இயக்குனருமான பிரபுதேவாவின் முதல் நடன நிகழ்ச்சி சென்னையில் பிரமாண்டமாக பெப்ரவரி…

7 minutes ago

தகுதியானவர்களின் மகளிர் உரிமைத் தொகையும் நிராகரிப்பு? கொந்தளிக்கும் பெண்கள்!

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில், தகுதியுள்ள நபர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. சென்னை: கலைஞர் மகளிர் உரிமைத்…

52 minutes ago

அடேங்கப்பா.! எம்ஜிஆர்-ன் கருப்பு கண்ணாடி ரகசியம்…போட்டுடைத்த பார்த்திபன்.!

எம்ஜிஆ-ரின் கருப்பு கண்ணாடி ரகசியம் தமிழ் சினிமாவின் நடிகர்,இயக்குனர் என பல திறமைகளை கொண்டிருப்பவர் பார்த்திபன்,தற்போது சமீப காலமாக சோசியல்…

1 hour ago

சம்பளம் பாக்கி வைத்தாரா தனுஷ்? காசு விஷயத்தில் காயப்படுத்திய எஸ்கே… பகீர் சம்பவம்!

சிவகார்த்திகேயன் நடிப்பில் தீபாவளிக்கு வெளியானது அமரன். மேஜர் முகுந்த் வாழ்க்கை வரலாறு திரைப்படம் என்பதால் எதிர்ப்பார்ப்பு எகிறியது. படமும் 100…

2 hours ago

விதியை மீறிய கோலி..கண்டுக்காத பாகிஸ்.வீரர்கள்…இந்திய அணிக்கு அடித்த லக்.!

ICC விதிமுறையை மீறிய கோலி இந்திய வீரர்களில் சச்சினுக்கு அடுத்தபடியாக தன்னுடைய திறமையால் பல சாதனைகளை நிகழ்த்தி வருபவர் விராட்கோலி,சமீப…

2 hours ago

வீடு புகுந்து பிரபல ரியல் எஸ்டேட் அதிபருக்கு மிரட்டல்.. நகை, செல்போன் பறிப்பு : கோவையில் பகீர்!

கோவை பொள்ளாச்சி ஜமீன் ஊத்துக்குளி சேர்ந்தவர் ராமசாமி. இவருடைய மகன் தேவ் தர்சன் ரியல் எஸ்டேட் அதிபர். இவர் கோவை,…

3 hours ago

This website uses cookies.