அருண் விஜய்யை அடித்து துன்புறுத்தும் பாலா… பிரபலத்தின் பேட்டியில் பரபரப்பில் கோலிவுட்!

Author: Shree
14 September 2023, 3:18 pm

தமிழ் சினிமாவின் விசித்திர இயக்குனர் பாலா தொடர்ந்து தன் படங்களில் நடிக்கும் நடிகர், நடிகைகளை நல்ல நடிப்பு வரவைக்க கொடுமை படுத்துவதாக பரதேசி படத்தில் நடித்த நடிகர்கள் புகார் கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தினர்.

அண்மையில் கூட பிதாமகன் மகன் பட தயாரிப்பாளர் வி.ஏ.துரையிடம் ரூ. 25 லட்சம் பணம் வாங்கிவிட்டு அவரை ஏமாற்றிவிட்டதாக கூறினார். அடுத்த இரண்டு நாட்களில் வணங்கான் படத்தில் நடித்த துணை நடிகைகளை சம்பளம் கொடுக்காமல் அவர்களை அடித்து உதைத்து கொடுமைப்படுத்திய விவகாரத்தில் சிக்கினார்.

bala updatenews360

தொடர்ந்து இப்படி பல பேரை ஏமாற்றி வயிற்றில் அடிச்சு பிழைப்பு நடத்தி வரும் பாலா தற்போது மீண்டும் ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளார். ஆம், சூர்யா அவரது இயக்கத்தில் வணங்கான் படத்தில் தயாரித்து நடித்து வந்தார். ஆனால், அவரை கொடுமை படுத்தி டார்ச்சர் செய்து… அதிகம் பணம் பிடிங்கி செலவழித்து வந்துள்ளார். ஒரு கட்டத்திற்கு மேல் படமே வேண்டாம் என கூறிவிட்டு சூர்யா விலகிக்கொண்டார். இது கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்பட்டது.

இதையடுத்து சூர்யா நடிக்க இருந்த ரோலில் தற்போது அருண் விஜய் ஹீரோவாக நடித்து வருகிறார். பாலாவின் சுயரூபத்தை தெரிந்தே அருண் விஜய் சினிமாவில் ஒரு நல்ல திருப்பு முனையாக இருக்கவேண்டும் என நினைத்து தான் பாலாவின் வணங்கான் படத்தில் கமிட் ஆனார்.

ஆனால், அருண் விஜய்யால் பொறுத்துக்கொள்ள முடியாத அளவிற்கு இயக்குனர் பாலா டாச்சர் செய்து வருவதாக பிரபல பத்திரிகையாளர் செய்யாறு பாலு பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். இருந்தாலும் தன்னிடம் இருக்கும் திறமையை பாலா போன்ற இயக்குநர்களால் தான் வெளிக்கொண்டுவர முடியும் என நம்பி எவ்வளவு அடிச்சாலும் தாங்கிக்கொண்டு தனது சிறப்பான நடிப்பை கொடுத்து வருகிறாராம் அருண் விஜய். நிச்சயம் இப்படம் அவரின் திறமையை எடுத்து சொல்லும் படமாக அமைய வாழ்த்துக்கள்.

  • Tamannaah Bhatia and Vijay Varma part ways after years of dating காதலரை பிரிந்தார் நடிகை தமன்னா.. இதுக்கும் அவருதான் காரணமா? இன்ஸ்டா பதிவால் பரபர!