எரியும் பனிக்காடு; அதர்வாவுக்கு கிடைத்த அங்கீகாரம்; பூரித்து நின்ற பாலா,…
Author: Sudha9 July 2024, 1:40 pm
பால் ஹாரிஸ் டேனியல் ஒரு மருத்துவர். தென்னிந்தியாவில் உள்ள அசாமிய தேயிலை தோட்டங்களில் 1941 முதல் 1965 வரை தலைமை மருத்துவ அதிகாரியாக பணியாற்றினார். அவர் ஒரு தொழிற்சங்க அமைப்பாளராகவும் செயல்பட்டார்.
தேயிலை தொழிலாளர்களை நேர்காணல் செய்யும் வாய்ப்பு அவருக்கு கிட்டியது.அவர்களின் கையொப்பமிடப்பட்ட அறிக்கைகளைப் பெற்று ஒரு நாவலை உருவாக்கினார்.
ரெட் டீ”என்ற அந்த நாவலில் ஆங்கிலேயர் ஆட்சியில் தோட்டத் தொழிலாளர்களின் மோசமான நிலைமை, கடன் கொத்தடிமைகள், அதிலிருந்து தப்பிக்க முடியாமல் அவர்களின் போராட்டம் ஆகியவற்றை எழுதியிருந்தார்.
இந்த புத்தகத்தை “எரியும் பனிக்காடு” என்ற பெயரில் தமிழில் மொழி பெயர்த்தார் இரா.முருகவேல்.
எரியும் பனிக்காடு நாவலை மையமாகக் கொண்டு பாலா இயக்கி அதர்வா மற்றும் வேதிகா நடித்து 2013 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் பரதேசி. இத்திரைப்படத்திற்கான வசனத்தை நாஞ்சில் நாடன் எழுதினார்.ஜி. வி. பிரகாஷ் குமார் இசையமைத்திருந்தார்.அதர்வாவின் சினிமா வாழ்க்கையில் அதர்வாவை சிறந்த ஒரு நடிகராக “பரதேசி” திரைப்படம் அடையாளம் காட்டியது.
2012 ஆம் ஆண்டுக்கான 63 வது தேசிய திரைப்பட விருதுகளில் சிறந்த உடை வடிவமைப்புக்கான தேசிய விருது இந்த படத்தில் பணிபுரிந்த பூர்ணிமாவிற்கு வழங்கப்பட்டது.