பிரபல நடிகையின் வாய்ப்பை தட்டிப் பறிக்க நினைத்த சூர்யா.. சைலன்டாக காய் நகர்த்திய பாலா..!

Author: Vignesh
24 February 2024, 7:07 pm

புஷ் புஷ் நடிகையாக கொழுக் மொழுக் அழகியாக அக்கட தேசத்தில் இருந்து தமிழ் சினிமாவிற்கு நடிக்க வந்தவர் நடிகை ஜோதிகா. இந்தி சினிமாவில் நடித்து தனது கெரியரை ஆரம்பித்த ஜோதிகா வாலி படத்தில் காமியோ ரோலில் நடித்து அறிமுகமானார்.

jyothika-updatenews360

முதல் படத்திலே நல்ல அறிமுகத்தை பெற்ற அவர் தொடர்ந்து பூவெல்லாம் கேட்டுப்பார், சிநேகிதியே, குஷி, பூவெல்லாம் உன் வாசம், பிரியமான தோழி, தூள், காக்க காக்க, மன்மதன், பேரழகன், சந்திரமுகி, சில்லுனு ஒரு காதல் இப்படி பல்வேறு ஹிட் திரைப்படங்களில் நடித்துள்ளார்.

காக்க காக்க படத்தில் நடித்த போது நடிகர் சூர்யாவை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். திருமணத்திற்கு பிறகு சில ஆண்டுகள் நடிக்காமல் சினிமாவை விட்டு ஒதுங்கியே இருந்தார். பின்னர் மீண்டும் இரண்டாவது இன்னிங்க்ஸை துவங்கி கலக்கி வருகிறார்.

jyothika net worth

இந்நிலையில், பாலா, சூர்யா காம்போவில் வெளிவந்த அனைத்து திரைப்படங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்துள்ளது. அதுமட்டுமின்றி, சூர்யாவின் சினிமா வளர்ச்சிக்கு பாலா தான் முக்கிய காரணம் என்பதே பலரும் அறிந்த உண்மை. இந்நிலையில், பேட்டி ஒன்றில் பேசிய சினிமா பத்திரிக்கையாளர் செய்யாறு பாலு நந்தா படத்தின் ஷூட்டிங்கில் நடந்த சம்பவத்தை குறித்து பேசி உள்ளார்.

அதில், அவர் நந்தா படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக லைலாவை போடக்கூடாது என சூர்யா விடாப்பிடியாக இருந்திருக்கிறார். அந்த படத்தில், ஜோதிகாவை ஹீரோயினாக போடுங்கள் என பாலாவிடம் தயங்கி தயங்கி சூர்யா கேட்டிருக்கிறார். ஆனால், படத்திற்கு லைலா தான் சரியாக இருப்பார் என்ற எண்ணம் பாலாவுக்கு இருந்துள்ளது. இதனால், சூர்யாவிடம் இந்த படத்திற்கு ஜோதிகா சரியாக இருக்க மாட்டார். நீ ஏதும் லவ் பண்றியா என கேள்வி எழுப்பி அதெல்லாம் முடியாது என்று கறாராக பாலா கூறிவிட்டாராம். அதன் பின்னர் கௌதம் மேனன் சூர்யா, ஜோதிகாவை ஒரு படத்தில் நடிக்க வைத்தார். அந்த சமயத்தில், இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது என்று செய்யாறு பாலு கூறியுள்ளார்.

  • Jyothika controversy in Bollywood web series ஜோதிகா நீங்களே இப்படி பண்ணலாமா…படு கேவலம்…முகம் சுளித்த ரசிகர்கள்.!