அந்த நடிகையையும் விட்டுவைக்கலையா?.. டார்ச்சர் செய்த பாலா, ஹோட்டலில் கதறி அழுத நடிகை..!

Author: Vignesh
4 March 2024, 9:08 am

தமிழ் சினிமாவின் விசித்திர இயக்குனர் பாலா தொடர்ந்து தன் படங்களில் நடிக்கும் நடிகர், நடிகைகளை நல்ல நடிப்பு வரவைக்க கொடுமை படுத்துவதாக பரதேசி படத்தில் நடித்த நடிகர்கள் புகார் கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தினர். இவர் இயக்கத்தில் தற்போது வணங்கும் திரைப்படம் உருவாகியுள்ளது.

suriya - updatenews360

இப்படம் குறித்து, சமீபத்தில் சர்ச்சை எழுந்தது. இப்படத்தில் இருந்து நடித்து விலகிய நடிகை மமிதாவவை பாலா அடித்ததாக தகவல் ஒன்று வெளியானது. தன்னை இயக்குனர் பாலா அடிக்கவில்லை என அவரும் விளக்கம் கொடுத்து சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்திருந்தார்.

bala - updatenews360

இந்த நிலையில், பிரபல பத்திரிக்கையாளர் செய்யாறு பாலு இயக்குனர் பாலா குறித்து பேசி இருக்கும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அதில், எவ்வளவு பெரிய நடிகராக இருந்தாலும், பாலா கதை சொல்ல மாட்டார். நந்தா படத்தின் சமயத்தில் லைலா ஒரு ஹோட்டலில் தங்கியிருந்தார். அப்போது, அவரை பார்ப்பதற்காக நான் அங்கே சென்றிருந்தேன்.

bala - updatenews360

அந்த நேரத்தில், பாலா தன்னை கடுமையாக டார்ச்சர் செய்கிறார் என்று கூறி லைலா கதறி அழுதார். படத்திலிருந்து விலகிவிடலாம் என்ற எண்ணத்தில் இருந்த லைலாவை சிலர் சமாதானம் செய்து வைத்தனர். அதன் பின்னர், படம் வெளியானதும் லைலா மிகவும் எமோஷனலாக பாலாவிடம் சென்று மன்னிப்பும் கேட்டார் என செய்யாறு பாலு தெரிவித்து இருந்தார்.

  • tvk leader vijay statement on waqf amendment bill இதுதான் பாஜகவின் பெரும்பான்மைவாத ஆதிக்க அரசியல்- அறிக்கையால் அலறவிட்ட தவெக தலைவர் விஜய்…