விஜயகாந்த் மரணம்… போனில் கூட துக்கம் விசாரிக்காத அஜித் – மனம் நொந்து பேசிய பிரபலம்!

Author:
26 August 2024, 8:39 pm

தமிழ் மக்களால் வாரி வள்ளல் என அழைக்கப்படும் ஒரே நடிகர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் தான். தமிழ் சினிமாவில் கொடிகட்டி பறந்த நட்சத்திர நடிகராக வலம் வந்து கொண்டிருந்த விஜயகாந்த் சினிமாவை தாண்டி அரசியலிலும் களத்தில் இறங்கி நிஜ ஹீரோவாகவே மக்களுக்கு பல நலத்திட்ட உதவிகளை செய்து வந்தார்.

vijayakanth

இதனிடையே கடந்து ஆண்டுகளாகவே பெரிய அளவில் உடல் நலம் குன்றி இருந்த கேப்டன் விஜயகாந்த் தொடர்ந்து சிகிச்சை எடுத்து வந்தார். ஆனால், சிகிச்சை பலனின்றி கடந்த கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 28ஆம் தேதி காலமானார். இவரது இந்த மரணம் ஒட்டுமொத்த சினிமா துறையை உருக்குலையைச் செய்தது அது மட்டும் இல்லாமல் மக்கள் எல்லோரும் கூடி திரண்டு ஒரு வரலாற்று மரணம் போல் இது பேசப்பட்டது.

அவ்வளவு கோடிக்கணக்கான ரசிகர்கள் கூட்டம் விஜயகாந்தின் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டனர். அது மட்டும் இல்லாமல் திரைத்துறை சேர்ந்த பல பிரபலங்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி புகைப்படங்கள் வீடியோக்கள் இணையத்தில் வைரல் ஆகியது. நடிகர் விஜய் விஜயகாந்தின் உடலை நேரில் சென்று பார்த்த போது கலங்கியது பிரேமலதாவிடம் ஆறுதல் கூறிவிட்டு வந்த வீடியோக்கள் இணையத்தில் அதிக அளவில் பகிரப்பட்டது .

இந்த நிலையில் தற்போது ஒரு அதிர்ச்சிக்குரிய தகவல் வெளியாகியிருக்கிறது. அதாவது பிரபல தயாரிப்பாளரும் இயக்குனரும் ஆன பாஸ்கரின் மகன் தான் பாலாஜி பிரபு… இவர் சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட போது அஜித் குறித்து பேசினார் அப்போது…தேவைப்படும் அனைவருக்கும் வாரி வாரி உதவிகள் செய்து வந்த மாமனிதன் விஜயகாந்த் அவருடைய மறைவுக்கு பல பிரபலங்கள் அஞ்சலி செலுத்த நேரில் வரவே இல்லை.

குறிப்பாக நடிகர் அஜித்…. நான் சொல்லப்போகும் இந்த விஷயத்தை கேட்டால் அஜித் ரசிகர்களே என் மீது கோபப்படுவார்கள். ஆனால். உண்மை என்ன என்பதை நான் சொல்லித்தான் ஆக வேண்டும். கேப்டன் விஜயகாந்தின் மறைவுக்கு நேரில் அஞ்சலி செலுத்தாவிட்டாலும் பரவாயில்லை நடிகர் அஜித் ஃபோனில் கூட பிரேமலதா விஜயகாந்த்திற்கு அழைப்பு விடுத்து துக்கம் விசாரிக்கவே இல்லை என்பதுதான் நிதர்சனமான உண்மை என கூறி இருக்கிறார். இவரது இந்த பேட்டி திரையுலகினரை மட்டும் இல்லாமல் ரசிகர்களுக்கும் பேரதிர்ச்சியை கொடுத்திருக்கிறது.

  • A man fraud in the name of Sunny Leone சன்னி லியோன் பெயரில் இப்படி ஒரு மோசடியா? அதிர்ந்த அரசு!
  • Views: - 213

    0

    0