அது என்னப்பா… சிகரெட் போட்டு விளையாடுற இடமா? சர்ச்சையில் சிக்கிய 62 வயது நடிகர்..!

Author: Vignesh
7 January 2023, 7:00 pm

‘உலகநாயகன்’ கமல்ஹாசனின் வாரிசாக இருந்தாலும், தன்னுடைய தனித்துவமான திறமையினால் திரை உலகில் முன்னணி நட்சத்திர நடிகையாக வலம் வரும் ஸ்ருதிஹாசனின் நடிப்பில் தயாராகி இருக்கும் ‘வால்டேர் வீரய்யா’ மற்றும் ‘வீரசிம்ஹா ரெட்டி’ என இரண்டு திரைப்படங்கள் ஒரே நாளில் வெளியாகவிருக்கிறது.

இணைய தலைமுறையினரின் கையடக்க கணினி முதல் அவர்கள் பணியாற்றும் மடிக்கணினி வரை டிஜிட்டல் திரை நாயகியாக காட்சியளிக்கும் நடிகையான ஸ்ருதிஹாசன், சமூக வலைதளங்களில் தீவிரமாக இயங்கும் முன்னணி நட்சத்திர நடிகையும் ஆவார்.

Sruthihasan updatenews 360

மில்லியன் கணக்கிலான மக்களை தன் சமூக வலைதள பக்கங்களின் பின் தொடர்பாளர்களாக கொண்டிருக்கும் இவர், தன்னை பற்றிய செய்திகளையும், தான் உணர்ந்த உணர்வுகளையும் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதில் நேர்மையானவர். இதற்கு சமூக வலைதளங்களில் அவர் பதிவிட்ட காணொளிகளும், எண்ணங்களும் சாட்சி.

இந்நிலையில் நடிகை ஸ்ருதிஹாசன் நடிப்பில் தயாராகி வரும் இரண்டு தெலுங்கு திரைப்படங்கள் ஒரே நாளில் வெளியாகிறது.

Sruthi-Updatenews360 (4)

வால்டேர் வீரய்யா படத்தில் நடித்துள்ள டோலிவுட் மெகா ஸ்டார் சிரஞ்சீவிக்கு ஜோடியாகவும், அதேபோல், வீர சிம்ஹா ரெட்டி திரைப்படத்தில் பாலகிருஷ்ணாவுடன் ஜோடியாகவும் நடித்துள்ளார்.

இருவருமே தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர்களாக இருந்தாலும், 60 வயதை கடந்த சீனியர்கள் என்பதனால் தனது அப்பா வயதுடைய நடிகர்களுடன் ஸ்ருதிஹாசன் ஜோடியாக நடிக்கிறாரே என நெட்டிசன்கள் ட்ரோல் செய்தனர்.

Sruthihasan updatenews 360 03

இந்தநிலையில், வீர சிம்மா ரெட்டி படத்தின் டிரைலர் நேற்று வெளியானது. படத்தின் டிரைலரில் பாலகிருஷ்ணா நடிகையின் மேல் அங்கத்தில் சிகரெட்டை தூக்கிபோட்டு பஞ்ச் செய்து பிடிக்கும் காட்சி அமைந்துள்ளது.

அந்த நடிகை ஸ்ருதிஹாசன் என்று சிலர் பேசி வருகிறார்கள். இந்த காட்சி தற்போது முகம் சுளிக்க வைத்துள்ளதாக கூறி நெட்டிசன்கள் அந்த காட்சியை நீக்க வேண்டும் என போர்க்கொடி தூக்கி உள்ளனர்.

balakrishna veera simha reddy- updatenews360

62 வயதான பெரிய மனுஷன் மகள் வயதாகும் நடிகையிடன் இப்படியான காட்சியில் நடிப்பதா என்று விமர்சித்தும் வாய்ப்பிற்காக இப்படி நடிப்பீர்களா என்று ஸ்ருதிஹாசனையும் கண்டபடி நெட்டிசன்கள் விமர்சித்து வருகிறார்கள்.

  • அஜித் ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் சர்ப்ரைஸ்..விடாமுயற்சி பாடல் லிரிக் எப்போ ரிலீஸ்-னு தெரியுமா..!
  • Views: - 542

    0

    1