என்ட்ரி கொடுத்த ராதிகா.. சரத்குமார் கண்முன் கட்டியணைத்து முத்தமழை பொழிந்த 63 வயது நடிகர்..!(வீடியோ)
Author: Vignesh25 March 2024, 10:48 am
ராதிகா கிழக்கே போகும் ரயில் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். 1970 மற்றும் 80களில் முன்னணி நடிகையாக வலம் வந்தார் ராதிகா. இவர் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த், சரத்குமார் என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்துள்ளார். இதுமட்டும் இல்லாமல் தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் இந்தி என பல்வேறு மொழிகளில் நடித்துள்ளார்.
மேலும் சித்தி என்னும் சீரியல் மூலம் சின்னத்திரையில் காலடி எடுத்து வைத்த ராதிகா பல ஹிட் தொடர்களை தயாரித்து நடித்துள்ளார். அதன் பின் சன் டிவியில் சித்தி 2 சீரியலில் இருந்து விலகி முழுநேர அரசியல்வாதியாகி விட்டார். தற்போது படங்களில் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
தொடர்ந்து நடிப்பு, தயாரிப்பு , அரசியல் என பிசியாக இருந்து வரும் நடிகை ராதிகா கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பிரம்மாண்ட விருது விழா ஒன்றில் சரத்குமாருடன் இருவரும் பங்கேற்றனர். இருவரும் இணைந்து தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணாவிற்கு விருது வழங்கினார்கள். அப்போது, மேடைக்கு வந்த பாலகிருஷ்ணா முதலில் சரத்குமாருக்கு கை கொடுத்துவிட்டு நடிகர் ராதிகாவை கட்டிப்பிடித்து பார்மலாக முத்தம் கொடுத்தார்.
பின் பாலகிருஷ்ணாவிற்கு மை தர மறுத்தார் சரத்குமார். ராதிகாவை மட்டும் கட்டிப்பிடித்த என்ன கட்டிப் பிடிக்கல என கேட்டு பாலகிருஷ்ணாவை கலாய்த்தார் சரத்குமார். இந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.