தெலுங்கு திரை உலகின் சூப்பர் ஸ்டார் நந்தமுரி பாலகிருஷ்ணா நடிகர் தயாரிப்பாளர் அரசியல்வாதி என மாஸ் காட்டி வருகிறார். இவருக்கு லட்சக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். 60 வயதை கடந்தாலும், ஆக்ஷனில் இளம் ஹீரோகளுக்கு டப் கொடுக்கும் வகையில், இவர் இருந்து வருகிறார். தற்போது, அவரது சம்பளம் சொத்து கார்களின் கலெக்ஷன் ஆகியவற்றை குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளன.
முன்னதாக, 1974 ஆம் ஆண்டு வெளியான தத்தம்மா கலா என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான பாலையா கடந்த 50 ஆண்டுகளாக நடித்து வருகிறார். இதுவரை 108 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். இவரது, பஞ்ச் வசனம் ஆக்ஷன் என பாலையாவின் வெறித்தனமான நடிப்புக்கு டோலிவுட் ரசிகர்கள் சொக்கி கிடைக்கின்றனர். இவரது கண் அசைவில் கார்கள் பறப்பது, ஒரே மிதப்பில் லாரியை புரட்டி விடுவது என இது போன்ற வீர சாகசங்களை பாலைய்யா செய்தால் தான் ரசிகர்கள் நம்புவார்கள் என சூப்பர் ஸ்டார் ரஜினியே பாராட்டி இருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: என்ன ஜென்மம்.. ஊர் உலகம் ஒப்புக் கொள்ளுமா?.. சூர்யா – ஜோதிகா காதல் குறித்து சிவகுமார் இப்படி சொல்லிட்டாரே..!
அதேபோல், பாலையாவின் படங்கள் பாக்ஸ் ஆபிஸில் 100 கோடிக்கு மேல் வசூலித்து மாஸ் காட்டியும் இருக்கின்றன. பாக்ஸ் ஆபிஸ் கிங்காக இருந்தாலும், ஒரு படத்திற்கு 20 முதல் 30 கோடி ரூபாய் தான் இவர் சம்பளமாக வாங்கி வருகிறார். இருந்தாலும், சினிமா விளம்பரம் போன்றவர்களில் நடிப்பதன் மூலம் ஆண்டுக்கு 70 முதல் 80 கோடி வரை இவருக்கு வருமானம் கிடைக்கிறதாம். அதேபோல, ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில் வசிக்கும் பாலைய்யாவின் வீட்டின் மதிப்பு சுமார் 50 கோடி ரூபாய் என கூறப்படுகிறது. அரண்மனை மாதிரி கட்டப்பட்டுள்ள இந்த வீட்டின் நீச்சல் குளம், லிப்ட் என சகல வசதிகளும் இருக்கிறது. இது தவிர மேலும் பல இடங்களிலும் இவருக்கு வீடுகள் உள்ளது.
மேலும் படிக்க: கேஜிஎப் பட நடிகைக்கு செம அடி.. சுற்றி வளைத்த பொதுமக்கள் சத்தம் போட்டு அலறிய வீடியோ வைரல்..!
அதேபோல, பிஎம்டபிள்யூ 7 சீரிஸ், போர்ஸ், பனமேரா கார்கள் தான் அதிகம் பயன்படுத்துவாராம். இந்த இரண்டு கார்களுமே, தலா இரண்டு கோடி ரூபாய்க்கு மேல் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இதுதவிர ரேஞ்ச் ரோவர், பென்ஸ் போன்ற கார்களும் சொந்தமாக வைத்துள்ளார். ஒட்டுமொத்தமாக பாலைய்யாவின் சொத்து மதிப்பு 600 கோடிக்கு மேல் இருக்கும் என டோலிவுட் வட்டாரங்களில் கூறப்படுகிறது.
பட விழா ஒன்றில், பேசிய பாலகிருஷ்ணா 22 வயதாகும் ஸ்ரீலீலா பகவந்த் கேசரி படத்தில் எனக்கு மகளாக நடித்துள்ளார். ஆனால், படப்பிடிப்பில் என்னை பார்க்கும் பொழுது மாமா மாமா என்றுதான் அழைத்து வந்தார். அடுத்த படத்தில் ஸ்ரீலீலாவுடன் ஜோடி சேர்ந்து நடிக்க வேண்டும் என விரும்புகிறேன் என்று பாலகிருஷ்ணா பேசியிருந்தார். இதனை பார்த்த ரசிகர்கள் 63 வயது பாலகிருஷ்ணாவிற்கு 22 வயது சின்ன பொண்ணு வேணுமா என்று கமெண்ட்களில் கிண்டலாக தெரிவித்து வருகின்றனர்.
திணறிய பாகிஸ்தான் பேட்ஸ்மன்கள் இன்று துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் முதலில் டாஸ் வின் பண்ணி…
தன்னுடைய படம் மூலம் பதிலடி கொடுத்த அஸ்வத் மாரிமுத்து பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டிராகன் திரைப்படம் 21 ஆம் தேதி…
ரசிகரின் செயலால் கடுப்பான உன்னி முகுந்தன் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் உன்னி முகுந்த்,சமீபத்தில் இவருடைய…
வசூலில் மந்தமாகும் NEEK தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் பல திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது .அந்த வகையில்…
விஜய் நடிக்காதற்கு காரணம் என்ன விஷால் நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சண்டக்கோழி,இப்படம் பக்கா…
அரையிறுதி வாய்ப்பு யாருக்கு கிரிக்கெட் வரலாற்றில் பல வருடமாக இந்தியா பாகிஸ்தான் ஆட்டம் என்றாலே அதற்கு தனி எதிர்பார்ப்பு ரசிகர்களிடம்…
This website uses cookies.