அஞ்சலியை வற்புறுத்திய சூப்பர் ஸ்டார்?.. உண்மையை வெட்ட வெளிச்சமாக்கிய பிரபலம்..!

Author: Vignesh
6 July 2024, 9:00 am

தெலுங்கு திரை உலகின் சூப்பர் ஸ்டார் நந்தமுரி பாலகிருஷ்ணா நடிகர் தயாரிப்பாளர் அரசியல்வாதி என மாஸ் காட்டி வருகிறார். இவருக்கு லட்சக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். 60 வயதை கடந்தாலும், ஆக்ஷனில் இளம் ஹீரோகளுக்கு டப் கொடுக்கும் வகையில், இவர் இருந்து வருகிறார். தற்போது, அவரது சம்பளம் சொத்து கார்களின் கலெக்ஷன் ஆகியவற்றை குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளன.

Nandamuri Balakrishna

முன்னதாக, 1974 ஆம் ஆண்டு வெளியான தத்தம்மா கலா என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான பாலையா கடந்த 50 ஆண்டுகளாக நடித்து வருகிறார். இதுவரை 108 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். இவரது, பஞ்ச் வசனம் ஆக்ஷன் என பாலையாவின் வெறித்தனமான நடிப்புக்கு டோலிவுட் ரசிகர்கள் சொக்கி கிடைக்கின்றனர். இவரது கண் அசைவில் கார்கள் பறப்பது, ஒரே மிதப்பில் லாரியை புரட்டி விடுவது என இது போன்ற வீர சாகசங்களை பாலைய்யா செய்தால் தான் ரசிகர்கள் நம்புவார்கள் என சூப்பர் ஸ்டார் ரஜினியே பாராட்டி இருந்தது குறிப்பிடத்தக்கது.

Nandamuri Balakrishna

அதேபோல், பாலையாவின் படங்கள் பாக்ஸ் ஆபிஸில் 100 கோடிக்கு மேல் வசூலித்து மாஸ் காட்டியும் இருக்கின்றன. பாக்ஸ் ஆபிஸ் கிங்காக இருந்தாலும், ஒரு படத்திற்கு 20 முதல் 30 கோடி ரூபாய் தான் இவர் சம்பளமாக வாங்கி வருகிறார். இருந்தாலும், சினிமா விளம்பரம் போன்றவர்களில் நடிப்பதன் மூலம் ஆண்டுக்கு 70 முதல் 80 கோடி வரை இவருக்கு வருமானம் கிடைக்கிறதாம்.

Nandamuri Balakrishna

மேலும் படிக்க: நடந்து முடிந்த 2-ம் கல்யாணம்… ராக்கெட் வேகத்தில் வைரலாகும் விஜயின் புகைப்படம்..!

சாதாரணமாக ஆக்ஷன் ஹீரோ அடித்தால் எதிரிகள் மட்டும்தான் பறப்பார்கள். அதுவே பாலைய்யாய் என்று அடித்தால், அங்கிருக்கும் கார், லாரி உள்ளிட்ட பல விஷயங்கள் காற்றில் தான் மிதக்கும். இவர் ஒரே வார்த்தையில் சொன்னால் ட்ரெயின் கூட பின்னால் போகும். இதை மற்றவர்கள் செய்தால் அதை நெட்டிசன்கள் உடனடியாக கலாய்த்து விடுவார்கள். அதையே பாலைய்யா செய்தால் அதுதாண்டா மாஸ் எனக்கு கூறுவார்கள். இந்த அளவிற்கு அனைவரிடமும் தனக்கு என்று தனி இடத்தை பிடித்துள்ளார்.

மேலும் படிக்க: ஒரு லிமிட் இருக்கு.. தடவுறதுக்கு ஆயிரம் இடமும் இருக்கு.. கொந்தளித்து பேசிய சன் டிவி பிரபலம்..!

இவர், சமீபத்தில் கேங்ஸ் ஆப் கோதாவரி திரைப்படத்தின் பிரமோஷன் விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த பிரமோஷன் விழாவில் கலந்துகொண்ட பாலைய்யா ஹீரோ மற்றும் ஹீரோயினிக்கு இடையே, அமர்ந்திருந்தார். அந்த நிகழ்ச்சி, ஒரு பக்கம் நடந்து கொண்டே இருக்க, கேமிரா மேன் பாலையாவை போக்கஸ் செய்து விட்டார். இதை கவனித்த நெட்டிசன்கள் பாலைய்யாவின் இருக்கையின் கீழே தண்ணீர் பாட்டில் மற்றும் சரக்கு பாட்டில் இருக்கிறது என கமெண்ட் செய்து வருகிறார்கள். ஆனால், அது சரக்கு பாட்டில் தானா இல்லை வேறு ஏதாவது என தெரியவில்லை. ஆனால், இதனை நெட்டிசன்கள் மது என்று தான் தெரிவித்து வருகின்றனர். இந்த வீடியோ தற்போது வைரலானது.

இது ஒரு புறம் இருக்க அஞ்சலி மேடையில் இருந்த போது அருகில் வந்த பாலகிருஷ்ணா அஞ்சலியை தள்ளிவிட்டு இருக்கிறார். அதனால், என்ன சொல்வது என்று தெரியாமல் சிரிப்பது போல சமாளித்து உள்ளார் அஞ்சலி. அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பல்வேறு கண்டனங்களும் தெரிவிக்கப்பட்டு வந்தநிலையில், அஞ்சலி பாலாவுக்கு நன்றி தெரிவித்து பதிவிட்டு இருந்தார்.

மேலும் படிக்க: விலை உயர்ந்த செருப்பு வாங்க ஆசைப்பட்ட அனிகா : அதுக்குனு இப்படியா இறங்குவீங்க? ரசிகர்கள் விமர்சனம்!

மேலும், பாலகிருஷ்ணாவிற்கும் எனக்கும் ஒரு நல்ல மியூச்சுவல் ரெஸ்பெக்ட் இருக்கிறது. நாங்கள் நீண்ட காலமாக நல்ல நட்புடன் இருக்கிறோம். அவருடன் மீண்டும் மேடையில் இருந்தது, அற்புதமாக இருந்தது என்று பதிவிட்டு இருந்தார்.

anjali

இந்தநிலையில், இந்த சம்பவம் தொடர்பாக சினிமா விமர்சகர் சவிதா ஜோசப் சில விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார். அவர் பக்கத்தில், சரக்கு இருந்தது அதற்கு மறுப்பு தெரிவித்தனர். பாலகிருஷ்ணாவுக்கு குடிக்கும் பழக்கம் இருக்கிறது. பக்கத்தில் யாராவது சிரித்தாலோ அவரை பார்த்து பேசினாலோ அவருக்கு சட்டென்று கோபம், வந்து யார் நீ என்று கூறி அடித்து விடுவாராம். இதே போல, தான் அஞ்சலியையும் வேறொரு நடிகையும் சிரித்ததை பார்த்தது தான் அஞ்சலியை தள்ளிவிட்டுள்ளார்.

anjali

பக்கத்தில் இருந்த நடிகை அஞ்சலியை பிடித்தார். இதற்கு அஞ்சலி ரிப்ளே செய்திருப்பதை பார்க்கும் பொழுது, அவருக்கு பாலகிருஷ்ணா பப்ளிசிட்டியை கொடுத்துவிட்டார் என்பது போல் தான் தெரிகிறது. இது குசும்பான நன்றி தான். அஞ்சலியை வற்புறுத்தி பாலைய்யா டுவீட் போட வைக்கவில்லை என்று சபிதா ஜோசப் தெரிவித்திருக்கிறார்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 124

    0

    0