மறுபடியும் முதல்ல இருந்தா.. பாரதி கண்ணம்மா.. 2-ம் சீசனிலும் இப்படியா.. கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்..!

Author: Vignesh
21 February 2023, 7:45 pm

விஜய் தொலைக்காட்சியில் ரசிகர்கள் பட்டாளம் அதிகம் கொண்டு TRPயில் இடம்பிடித்து வரும் சீரியல் தொடர் பாரதி கண்ணம்மா. ஒரு சராசரி பெண்மணி குடும்பத்தில் சந்திக்கும் சிக்கல்கள், எதிர்ப்புகள் குறித்து எதார்த்தமாக அமைக்கப்பட்ட இந்த தொடர், நாளடைவில் ஜவ்வு போல இழுப்பதாக நெட்டிசன்கள் கலாய்த்து மீம்ஸ்களை தெறிக்க விட்டு வந்தனர்.

bharathikannammaserial_updatenews360

இந்நிலையில், புதிய கதைகளத்துடன் ‘பாரதி கண்ணம்மா 2’ சீரியல் உருவாகி உள்ளது. இந்த 2-ம் பாகத்தில் சன் டிவி ‘ரோஜா’ சீரியலில் நடித்து வந்த சிபு சூரியன் ஹீரோவாக நடிக்கிறார். வினுஷா தேவி மீண்டும் கண்ணம்மாவாக நடித்து வருகிறார். மேலும், கதை முற்றிலும் முதல் பாகத்திற்கு சம்மந்தம் இல்லாமல் இருப்பது போல தெரிகிறது.

இந்நிலையில், தற்போது பாரதி கண்ணம்மா 2-ன் லேட்டஸ்ட் ப்ரோமோ வெளியாகி உள்ளது. அதில், கண்ணம்மா செய்த வேலையால் பாரதிக்கு பார்த்திருந்த கல்யாண சம்பந்தம் விட்டு சென்றுவிட்டது என கண்ணம்மாவின் அப்பாவுக்கு தெரிய வருகிறது.

இதனால், நாளை கண்ணம்மாவை அழைத்து வர பாரதியின் அம்மா சௌந்தர்யா சொல்கிறார். இதை எல்லாம் சொல்லி அப்பா கண்ணம்மாவை திட்டுகிறார்.

இதனிடையே, இதை கேட்டு கண்ணம்மா வீட்டை விட்டு கிளம்ப முடிவெடுத்து பையுடன் கிளம்புகிறார். முதல் சீசனில் கண்ணம்மா பையுடன் தெருத்தெருவாக நடந்தது வைரல் ஆனது, அதே போல மீண்டும் தொடங்கி விட்டார்களே என நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ