வெண்பா வைத்த செக்: குத்திக்காட்டிய கண்ணம்மா.. பாரதி அடுத்து செய்ய போவது என்ன..?

Author: Vignesh
6 October 2022, 4:45 pm

ஸ்டார் விஜய் தொலைக்காட்சி தொடர்களில் ஒன்றான பாரதி கண்ணம்மா, தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது.

பாரதி மற்றும் கண்ணம்மா ஆகியோர் பிரிந்து வாழ தொடங்கி, அவர்களின் குழந்தைகள் தனித்தனியாக வாழ, பின்னர் அவர்கள் குறித்த உண்மையும் தெரிய வர இப்படி பாரதி கண்ணம்மாவில் வரும் ஒவ்வொரு நகர்வும் விறுவிறுப்பை கூட்ட தான் செய்தது.

அந்த வகையில், சமீபத்தில் அரங்கேறிய ஒரு விஷயம், உச்சகட்ட எதிர்பார்ப்பை மட்டுமில்லாமல் கடும் பரபரப்பிலும் பார்வையாளர்களை ஆழ்த்தி உள்ளது.

வெண்பா, புதிய திட்டம் ஒன்றை தீட்டி தன் வயிற்றில் வளரும் குழந்தையை பாரதியின் குழந்தை என நம்ப வைத்து, குழந்தை வளர்ந்த பிறகு பாரதியை திருமணம் செய்ய புதிய திட்டத்தை வெண்பா தீட்டுகிறார்.

அதன்படி பாரதியை சந்தித்து வயிற்றில் வளரும் குழந்தைக்காக தன் கழுத்தில் தாலி கட்ட வேண்டும் என அழுது வெண்பா கெஞ்சுகிறார். “ஊர் அறிய திருமணம் செய்யாமல் ஊருக்கு வெளியே ரகசியமாக கோயிலில் திருமணம் செய்தால் போதும்” என கூறுகிறார். பாரதியை மிரட்ட தற்கொலைக்கு முயற்சி செய்கிறார். வெண்பாவை மீட்டு பாரதி மருத்துவமனையில் சேர்க்கிறார். திருமணம் செய்து கொள்ள வாக்கு கொடுக்கிறார்.

இந்நிலையில், பாரதியின் மனசாட்சி வெண்பாவுக்கு கொடுத்த வாக்கு சரியா? கண்ணம்மாவை சட்டப்படி விவாகரத்து செய்யாமல் வெண்பாவை திருமணம் செய்தால் தண்டனை கிடைக்கும் தெரியுமா? கண்ணம்மா வாழக்கையை நினைத்து பாரு? உனக்கு கண்ணம்மா செய்த உதவி ஞாபகம் இருக்கா? என சரமாரியாக மனசாட்சி கேள்வி எழுப்பியது.

இந்த உயிர் கண்ணம்மா கொடுத்தது அந்த நன்றி எப்பவும் எனக்கு இருக்கும். ஆனால் கண்ணம்மா செய்த துரோகத்தை என்னால மறக்கவே முடியாது என பாரதி, மனசாட்சியிடம் பதில் அளிக்கிறார்.

மருத்துவமனையில் கண்ணம்மா உதவியுடன் ஒரு பெண்ணுக்கு பிரசவம் நடக்கிறது. ஒரு ஆண் குழந்தை பிறக்கிறது. அப்போது பிரசவமான பெண்ணின் கணவன் குடித்துவிட்டு, “குழந்தை என்னை மாதிரி இல்ல எனக்கு பிறந்தது இல்ல” என சண்டையிட, பாரதி நேரடியாக அந்த குடிகாரனிடம் சென்று டி என் ஏ டெஸ்ட் எடுத்தால் யாருடைய குழந்தை என தெரிந்து விடும் என்று கூறுகிறார்.

இதனை கேட்ட கண்ணம்மா, “ஊருக்கு மட்டும் தான் அட்வைஸ்.. நீங்க எப்போ டி என் ஏ டெஸ்ட் எடுக்க போறிங்க?” என கேட்கிறார். இதனால் அழுத்தமடைந்த பாரதி தவித்து கொண்டிருக்கும் போது பாரதியின் மனசாட்சி மீண்டும் தோன்றி “கண்ணம்மா சொல்வதில் நியாயம் இருக்கு பாரதி. நீ ஏன் டி என் ஏ டெஸ்ட் எடுக்க கூடாது?” என கேட்கிறது.

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ